»   »  சோனியாவின் தேனிலவு

சோனியாவின் தேனிலவு

Subscribe to Oneindia Tamil

கல்யாணமாகி ரொம்ப நாளாகி விட்ட நிலையில் தேனிலவுப் பயணத்துக்குத் தயாராகி வருகிறார்கள் செல்வராகவனும், மனைவி சோனியா அகர்வாலும்.

செல்வராகவனை காதலித்து, கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்து ஒரு வழியாக கல்யாணம் செய்து செட்டிலாகியுள்ளார் சோனியா அகர்வால். டிசம்பரில் இவர்களின் கல்யாணம் சிறப்பாக நடந்தது.

கல்யாணத்தை முடித்த கையோடு எல்லோரும் தேனிலவுக்குப் போகத்தான் பறப்பார்கள். ஆனால் செல்வாதான் வித்தியாசமான ஆளாச்சே. அவர் நேராக ஹைதராபாத் பறந்து போனார். அங்கு வெங்கடேஷ் நடித்த அடவரி மடலுகு அர்த்தலே வெருளே என்ற படத்தை இயக்கினார்.

படம் சமீபத்தில்தான் முடிந்து ரிலீஸாகி ஹிட்டும் ஆகி விட்டது. இதனால் பரம சந்தோஷமாக உள்ளார் செல்வா. இதையடுத்து தனது தேனிலவுப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளார் செல்வா.

செல்வாவும், சோனியாவும் மாலத்தீவில் கோலாகலமாக தேனிலவைக் கொண்டாடவுள்ளனராம். இன்னும் சில நாட்களில் புறப்படவுள்ளனராம்.

தேனிலவுப் பயணத்தை முடித்து விட்டு சென்னைக்குத் திரும்பிய பின்னர் கார்த்தி, சந்தியாவை வைத்து இயக்கப்போகும் மாலை நேரத்து மயக்கம் படத்திற்குச் செல்கிறார் செல்வா. அதை முடித்து விட்டு இந்தியில் உருவாகவுள்ள 7ஜி ரெயின்போ காலனியை முடிக்கிறார்.

Please Wait while comments are loading...