Just In
- 8 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 8 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 10 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 11 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்.. சூரரைப் போற்று படத்துக்கு என்ன இடம் தெரியுமா?
சென்னை: 2020ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் சூர்யாவின் சூரரைப் போற்றுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

டாப் 9 படங்களில் இந்தி படங்களே இடம்பெற்றுள்ள நிலையில், சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவே இது பார்க்கப்படுகிறது.
என்ன என்ன படங்கள் எந்த எந்த இடத்தில் இடம்பிடித்துள்ளன என்பதை இங்கே காண்போம்.

அமிதாப் பச்சன் படம்
அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்த ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான படம் குலாபோ சித்தபோ. இயக்குநர் சுஜித் சர்கார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை கூகுளில் அதிகமான ரசிகர்கள் தேடி உள்ளனர். கூகுள் வெளியிட்டுள்ள அதிகம் தேடப்பட்ட 2020 படங்கள் பட்டியலில் இந்த படத்துக்கு 10வது இடம் கிடைத்துள்ளது.

தோர் நடிகர் படம்
அவெஞ்சர்ஸ் படத்தில் தோர் கடவுளாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்ஹெம்ஸ்வொர்த் மற்றும் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா இணைந்து நடித்து நெட்பிளிக்ஸில் இந்த ஆண்டு வெளியான Extraction படம் கூகுள் தேடலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. சாம் ஹார்கிரேவ் இயக்கிய இந்த படம் உலகளவில் கலெக்ஷனை அள்ளியது.

வேட்டை இந்தி ரீமேக்
தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி நடிப்பில் வெளியான வேட்டை படத்தை அதிகாரப்பூர்வமாக பாலிவுட்டில் இயக்குநர் அகமது கான் பாகி 3 என ரீமேக் செய்தார். டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தியேட்டரில் ரிலீசானதும் தியேட்டர்கள் மூடப்பட்டன. பின்னர் ஓடிடியில் வெளியானது. கூகுள் தேடலில் 8வது இடத்தை பிடித்த இந்த படம் விமர்சன ரீதியாக அடிவாங்கியது.

ஆலியா பட் படம்
ஐஎம்டிபி ரேட்டிங்கில் ஒரு ஸ்டார் பெற்று, இந்த ஆண்டின் படு மோசமான படம் என ஒதுக்கப்பட்ட ஆலியா பட்டின் சடக் 2 திரைப்படத்தையும் இந்த ஆண்டு கூகுளில் அதிகமான ரசிகர்கள் தேடி உள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தின் எதிரொலியாக இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல்பு வாங்கினாலும் கூகுள் தேடலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.

காஞ்சனா இந்தி ரீமேக்
இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட்டில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் வெளியான லக்ஷ்மி படம் கூகுள் தேடலில் இந்த ஆண்டு 6ம் இடத்தை பிடித்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் வெளியானதும் விமர்சன ரீதியாக மிக மோசமான படம் என அறிவிக்கப்பட்டு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனையும் பறிகொடுத்தது.

கஞ்சன் சக்சேனா
கார்கில் போரை மையமாக வைத்து உருவான கஞ்சன் சக்சேனா படம் 2020ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. கரண் ஜோஹர் தயாரிப்பில் சரண் சர்மா இயக்கத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் இந்த படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

சகுந்தலாதேவி
நடிகை வித்யாபாலன் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான ஹியூமன் கம்ப்யூட்டர் சகுந்தலாதேவியின் பயோபிக் திரைப்படத்தை கூகுளில் ஏராளமானோர் தேடி உள்ளனர். அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தை அனு மேனன் இயக்கி இருந்தார். சகுந்தலாதேவியாக வித்யாபாலன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளினார்.

தன்ஹாஜி
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் அஜய் தேவ்கன், சைஃப் அலி கான், கஜோல், நேகா சர்மா உள்ளிட்டோர் நடித்திருந்த சுதந்திர போராட்ட வீரர் தன்ஹாஜி படம் கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் ஓம் ராவத் அடுத்ததாக பிரபாஸை வைத்து ஆதிபுருஷ் படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்தியளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு ஒடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படத்திலும் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கு மிகப்பெரிய இடம் கிடைத்துள்ளது. தென்னிந்திய படங்களிலேயே தமிழ்ப்படமான சூரரைப் போற்று படத்திற்குத் தான் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சுஷாந்தின் தில் பெச்சாரா
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு எதிரொலியாக அவரது நடிப்பில் வெளியான கடைசி படமான தில் பெச்சாரா படத்தை தான் கூகுளில் இந்த ஆண்டு கோடிக்கணக்கான ரசிகர்கள் தேடி உள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படத்தை அதிகமானோர் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.