»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

வாலி பட டைரக்டர் ஜே.சூர்யா சூப்பர் குஷியில் இருக்கிறார். குஷிக்குக் காரணம் தமிழில் இவர் இயக்கி வெற்றி பெற்ற குஷி படத்தின்தெலுங்குப் பதிப்பு பிச்சுக்கிட்டு ஓடுவதால்தானாம்.

தெலுங்கிலும் குஷி என்ற பெயரிலேயே இந்தப் படம் ரிலீசாகியுள்ளது. விஜய் ரோலில் பவன் கல்யாணும், ஜோதிகா கேரக்டரில் பூமிகாவும்நடித்துள்ளனர். தெலுங்கில் குஷி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதால் தெலுங்கிலும், தமிழிலும் பல தயாரிப்பாளர்கள் பணப் பெட்டிகளுடன்சூர்யாவை நோக்கிப் பாய்ந்து வருகிறார்களாம்.

ஆனால் வாய்ப்புகளை ஏற்பதில் மனிதர் மகா நிதானம் காட்டி வருகிறார். முதலில் தனது சொந்தத் தயாரிப்பான நியூ படத்தை முடிப்பதில்ஆர்வமாக இருக்கிறார். இந்தப் படத்தின் ஒரிஜினல் கதை ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தி பிக் (The Big) என்றபடத்தின் தழுவலாம்.

ஆங்கிலக் கதையை, தமிழுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்து முலாம் பூசி இயக்கவிருக்கிறார் சூர்யா. படத்தின்கதை இதுதான்: ஒரு விடலைச் சிறுவன். அவனுக்கு இளம் பெண் ஒருத்தி தோழி. இருவரும் இணை பிரியாமல்இருக்கிறார்கள். அந்த சமயத்தில், சிறுவனின் தோழியை ஒரு இளைஞன் காதலிக்கிறான். அது சிறுவனுக்குப்பிடிக்கவில்லை. சோகத்தில் மூழ்குகிறான்.

தானும் பெரியவனாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதே என்று வருந்துகிறான். அப்போது சிறுவர்கள்பெரியவர்களாக மாற முடியும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கிறார்கள். உடனடியாக அந்த ஆராய்ச்சிநிலையத்திற்கு சென்று, சிறுவர்களை பெரியவர்களாக மாற்றும் இயந்திரத்திற்குள் செல்கிறான். உடனடியாகவாலிபனாக மாறி விடுகிறான்.

ஆள் மாறினாலும் அறிவு மாறவில்லை. 8 வயது சிறுவனுக்குரிய அறிவே அவனுக்கு உள்ளது. மேலும் பலசிக்கல்கலையும் சந்திக்கிறான். வாழ்க்கையே வெறுத்துப் போய் விடுகிறது. பேசாமல் சிறுவனாகவே இருந்துவிடலாமே என்று வருத்தப்படுகிறான்.

இந்தக் கதையில் ஆங்காங்கே கொஞ்சம் கொத்தி படத்தை பொத்தி பொத்தி எடுத்து வருகிறார் சூர்யா. படத்தின்ஹிரோ அஜீத் (சின்ன வயது அஜீத் கேரக்டர் யாருக்கோ!).

படத்தின் பெயர்தான் நியூ. கதையோ ரொம்ப ஓல்டா இருக்கே சூர்யா?

Read more about: ajith, boomika, jothika, kushi, movie, soorya, tamilnadu, vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil