twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தென்னிந்தியாவில் டிவி 'அடிமைகள்' அதிகம்!

    By Staff
    |

    Jaya TV
    வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள்தான் அதிக அளவில் டிவி பார்க்கின்றனராம். டிஏஎம் என்ற நிறுவனம் இதுதொடர்பான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவின் பிற பகுதி மக்களை விட தென்னிந்திய மக்கள் அரை மணி நேரம் கூடுதலாக டிவி பார்க்கின்றனராம். இது வார நாள் கணக்கு. வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரம் அதிகமாக பார்க்கின்றனராம்.

    இந்தியாவின் பிற பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 மணி நேரம் 30 நிமிடங்கள் டிவி பார்க்கின்றனராம். தென்னிந்தியர்கள் 2 மணி நேரம் 50 மணி நேரம் பார்க்கின்றனர்.

    தமிழகத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட 3 சானல்களை மட்டும் கிட்டத்தட்ட 54 சதவீதம் பேர் பார்க்கின்றனர். மற்ற சானல்களை இவர்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லையாம்.

    தமிழகத்தில் ஒரு நாளைக்கு 6.5 எபிசோடுகளைப் பார்க்கின்றனர். கேரளாவில் இது 4 எபிசோடுகளாக உள்ளது.

    தென்னிந்தியாவில் அதிகம் டிவி பார்ப்பதில் முன்னணியில் இருப்பவர்கள் - வேறு யார் பெண்கள்தான். பிற்பகலில் டிவி பார்ப்பதில் கேரளா, கர்நாடகத்தை விட தமிழ்நாடு, ஆந்திராதான் முன்னணியில் உள்ளதாம்.

    ஆனால் ராத்திரி நேரங்களில் தமிழக மக்கள் அதிக அளவில் டிவி பார்ப்பதில்லையாம். ராத்திரியில் டிவி பார்க்கும் தமிழக மக்களின் எண்ணிக்கை 8 சதவீதமாக உள்ளது. அதேசமயம், வட இந்தியர்கள் இரவில்தான் அதிகம் டிவி பார்க்கிறார்களாம். அதாவது 10 மணிக்கு மேல் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகம் உள்ளது.

    தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் அதிகம் பிரபலமாக இருப்பது கிரிக்கெட். டிவியில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளைத்தான் இந்த இரு பிராந்திய மக்களும் அதிகம் பார்க்கின்றனர்.

    கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியர்களை அதிகம் கவருவது டென்னிஸ், டேபிள் டென்னிஸ் பேட்மிண்டன் ஆகியவையாகும். வட இந்தியர்களிடம் கிரிக்கெட்டுக்கு அடுத்து கால்பந்து, ஹாக்கி பிரபலமாக உள்ளதாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X