»   »  பரபரக்கும் ஸ்பைடர் மேன்-3

பரபரக்கும் ஸ்பைடர் மேன்-3

Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்பைடர்மேன்-3, இந்தியாவில் டைட்டானிக் வசூலை முந்தி விட்டதாம்.

ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் ரிலீஸான ஸ்பைடர்மேன்-3 படம் படு விறுவிறுப்பாக உலகெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை இப்படம் ரூ. 57 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாம்.

இதன் மூலம், உலக அளவில் ஹாலிவுட்டின் டாப் 10 மார்க்கெட் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு இந்தியாவில் 588 பிரிண்டுகள் போடப்பட்டன.

ஹாலிவுட் படம் ஒன்றுக்கு அதிக பிரிண்டுகள் போடப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

ஸ்பைடர்மேன்-3 படத்துக்கு இந்தியில் 261, ஆங்கிலத்தில் 162, தமிழில் 81 பிரிண்டுகள் போடப்பட்டன. மேலும் போஜ்பூரி மொழியிலும் ஸ்பைடர் மேன்-3 டப் ஆகியுள்ளது. இந்த மொழியில் டப் செய்யப்பட்ட முதல் ஹாலிவுட் படம் என்ற பெருமையும் ஸ்பைடர் மேனுக்குக் கிடைத்துள்ளது.

ஸ்பைடர்மேன்-3 இந்தியாவில் வெளியிட்பட்ட முதல் வாரத்திலேயே ரூ. 33.4 கோடி வசூலை குவித்தது. இதுவரை ரூ. 57 கோடி வசூலாகியுள்ளது. இதன் மூலம் இந்தப் படம் டைட்டானிக் குவித்த ரூ. 55.5 கோடி வசூலை மிஞ்சிவிட்டது.

இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு இருக்கும் சிறப்பான வரவேற்பையே இது காட்டுகிறது. கடந்த ஆண்டில் ஹாலிவுட் படங்களின் மொத்த பிரிண்ட்டுகள் எண்ணிக்கை 1,000 ஆக இருந்தது. இந்த ஆண்டில் இது 2,100 பிரிண்டுகளைத் தாண்டியுள்ளது.

2005ல் இந்தியாவில் ஹாலிவுட் படங்கள் குவித்த மொத்த வசூல் ரூ. 180 கோடி. இந்த ஆண்டு ஸ்பைடர்மேன்-3 உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் வசூல் ரூ. 300 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil