»   »  நடிக்க வரும் ஸ்ரீசாந்த்!

நடிக்க வரும் ஸ்ரீசாந்த்!

Subscribe to Oneindia Tamil

கிரிக்கெட்டில் கலக்கி வரும் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தற்போது நடிக்கப் போகிறார் - அதுவும் மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து.

Click here for more images

கிரிக்கெட்டராக கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீசாந்த், நல்ல டான்ஸரும் கூட. நகைச்சுவை உணர்வும் அவருக்கு ஜாஸ்தி. அவரது அக்கா கணவரான மது பாலகிருஷ்ணன் மலையாளத்தில் பிரபலமான பாடகர்.

கமல்ஹாசனின் ஹே ராம் படம் மூலம் மது பாலகிருஷ்ணனை தமிழிலும் பின்னணிப் பாடகராக இளையராஜா அறிமுகப்படுத்தினார்.

ஸ்ரீசாந்த்தைத் தேடி இப்போது ஒரு மலையாளப் பட வாய்ப்பு வந்துள்ளது. இப்படத்தில் ஸ்ரீசாந்த்துக்கு கிரிக்கெட் வீரர் வேடமாம். படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். படத்தை இயக்கப் போவது ஆசிஷ் அபு என்ற மலையாள இயக்குநர்.

இதுகுறித்து அபு கூறுகையில், இப்படம் குறித்து ஸ்ரீசாந்த்திடம் பேசியுள்ளோம். அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. பரிசீலிப்பதாக கூறியுள்ளார். அதற்காக காத்திருக்கிறோம்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் பயணத்தை முடித்து விட்டுத் திரும்பிய பின்னர் ஸ்ரீசாந்த்தை சந்தித்து கதையைக் கூறினேன். ஸ்ரீசாந்த் சம்மதம் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளேன். அவர் ஓ.கே. சொன்னவுடன் படப்பிடிப்பை தொடங்குவோம்.

அவர் பிசியாக உள்ளார் என்பது எனக்குத் தெரியும். ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் மும்முரமாக செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இருந்தாலும் எனது படத்தில் அவர் நடிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என்றார்.

மலையாளத்தில் பிரபலமான இயக்குநராக கமலிடம் தற்போது அசோசியேட்டாக இருக்கிறார் அபு என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஸ்ரீசாந்த்தின் ரோல் கெஸ்ட் ரோல் போல இருக்காது என்றும், கிட்டத்தட்ட மெளன ராகத்தில் கார்த்திக் வந்து போனது போல கலக்கலான ரோலாக இருக்கும் என்றும் அபு கூறியுள்ளார். ஸ்ரீசாந்த்தின் ரோல் கதைக்கு முக்கியத்துவமான ரோலாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பந்தால் எதிரணியினரை அடித்துத் துவைக்கும் ஸ்ரீசாந்த், நடிக்க வருவாரா?

Read more about: sreesanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil