»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களுக்குப் பின் ராஜ்கிரண் நடிக்கும் கொஞ்சிப் பேசலாம் என்ற படத்தில் அறிமுகமாகிறார் ஸ்ரீ.

புதுமுகம் தான் என்றாலும் அதற்குரிய அடையாளமே இல்லை. நடிப்பும் நன்றாகவே வருகிறது. அதைவிடமுக்கியமான கவர்ச்சி காட்டுவதிலும் கஞ்சத்தனமே இல்லை. புதுமுகம் என்ற பயமும் இல்லை.

டைரக்டர் சொன்னடிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வந்து நிற்கிறார். கூச்சம் எல்லாம் பார்ப்பவர்களுக்கு வந்தால் தான் உண்டு.

காதல் கதை தானாம். ஆனால், இதில் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டததைத் தான்ஹைலைட் ஆக்கியிருக்கிறாராம் இயக்குனர் காளீஸ்வரன்.

அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறார். எவ்வளவு கரடுமுரடான மனிதனாக இருந்தாலும் அவனுக்குள்ளும் ஒரு ஈரரேகை ஒட்டிக் கொண்டே தான் இருக்கும் என்பதை ராஜ்கிரண் கேரக்டர் சொல்கிறது. காதல் ஒரு கலாச்சாரத்தையேமாற்றும் சக்தி கொண்டது. இதைத் தான் படத்தில் சொல்கிறோம் என்று கவிதை மாதிரி பேசுகிறார் டைரக்டர்.

இளையராஜாவிடமும் போய் இப்படிேயே பேசியிருப்பார் என்று தெரிகிறது, காளீஸ்வரனின் பேச்சில் சொக்கியஇசைஞானி, எல்லா பாடல்களுக்கும் படு வேகமாய் அருமையான டியூன்களைப் போட்டுத் தந்துஅசத்திவிட்டாராம்.

படத்தின் சூட்டிங் அம்பாசமுத்திரம், நாகர்கோவில் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. பாடல்காட்சிகளை கேரளத்தின் இயற்கை கொஞ்சும் ஆழப்புலாவின் பேக்-வாட்டர்களில் வைத்துக் கொள்ள முடிவுசெய்திருக்கிறார்கள்.

மேலும் குற்றாலத்திலும் பாடல்களை சுட உள்ளார்களாம். வெளிநாட்டுக்கு போகும் திட்டமெல்லாம் இல்லையாம்.

படத்தில் ராஜ்கிரணின் ரொம்பவே பேசப்படும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிக அற்புதமாய் நடித்துக்கொண்டிருக்கிறாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil