»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழின் மிகச் சிறந்த பழம்பெரும் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதருக்கு, தாதாசாகிப் பால்கே விருது வழங்க வேண்டும்என்று தமிழ்ப் பட அதிபர்கள் சங்க நல அறகட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அறக்கட்டளையின் தலைவர் கேயார், ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மனு அனுப்பியுள்ளார்.

தமிழில் பக்கம் பக்கமாக ஹீரோவும் ஹீரோயினும் வசனம் பேசிக் கொண்டிருந்த காலத்தில், மிக யதார்த்தமானவசனங்களை நுழைத்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக் காட்டியவர் ஸ்ரீதர்.

ரயில் நீள தலைப்புகளிலும் சமஸ்கிருத பெயர்களிலும் தமிழ் சினிமா சிக்கியிருந்த காலத்தில் காதலிக்கநேரமில்லை என்று ஒரு தலைப்பைக் கொடுத்து அனைவரையும் தன் பக்கம் திரும்பச் செய்தவர்.

நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தை முழுக்க முழுக்க ஒரு மருத்துவமனைக்குள்ளேயே எடுத்து முடித்து1960களிலேயே வரலாறு படைத்தவர். காதலிக்க நேரமில்லை இன்று பார்த்தாலும் அது புதிய படம் தான். இளமைகலாட்டாக்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தவரே ஸ்ரீதர் தான்.

அவருக்கு இந்தியாவின் மிக உயரிய சினிமா விருதை வழங்க வேண்டும் என்று இப்போது கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிக்கு கேயார் அனுப்பியுள்ள மனுவில்,

1969ம் ஆண்டு முதல் வருடந்தோறும் இந்தியாவில் மிகச் சிறந்த திரைப்பட கலைஞர்களை தாதா சாகிப் பால்கேவிருது வழங்கி மத்திய அரசு கெளரவித்து வருகிறது. இந்த விருது 2001ம் ஆண்டு வரை திரைப்படசாதனையாளர்கள் 33 பேருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இதில் தென்னிந்திய திரையுலகை சார்ந்த பி.என்.ரெட்டி, எல்.வி.பிரசாத், பி.நாகிரெட்டி, ஏ.நாகேஸ்வரராவ்,ராஜ்குமார், சிவாஜி கணேசன் ஆகிய 6 பேருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டுக்கான விருது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந் நிலையில், தாதா சாகிப் பால்கே விருதுபெறுவதற்கு தகுதி வாய்ந்தவர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய திரையுலக சாதனையாளர் டைரக்டர்ஸ்ரீதர் மட்டுமே.

1930ம் வருடம் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்தவர், ஸ்ரீதர். கர்நாடகஇசைக் கலைஞராக, திரைப்பட வசன கர்த்தாவாக, டைரக்டராக, தயாரிப்பளாராக நீண்ட காலம்பணியாற்றியுள்ளார்.

திரையுலகில் இலக்கிய நடையில் வசனங்கள் பேசப்பட்டு வந்த காலத்தில், யதார்த்தமாக, இயல்பு பேச்சு நடையில்வசனம் எழுதி புரட்சியை உருவாக்கியவர் ஸ்ரீதர்.

70 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். அவர் படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்,ராஜ்கபூர், ராஜேந்திரகுமார், ராஜ்குமார், கிஷோர்குமார், அமிதாப்பச்சன், சத்ருகன் சின்ஹா, முத்துராமன்,ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், ரஜினி காந்த், கமலஹாசன், விக்ரம், பத்மினி, வைஜெயந்தி மாலா, மீனாகுமாரி, காஞ்சனாஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

வெண்ணிற ஆடை படத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கதாநாயகியாக அறிமுகம் செய்தவர். டைரக்டர்ஸ்ரீதரை ளெரவிக்கும் வகையில் தாதாசாகிப் பால்கே விருது வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கேயார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான ஸ்ரீதருக்கு தாதா சாகிப் வழங்கக் கோருவது மிகநியாயமான கோரிக்கை தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil