»   »  ஸ்ரீகாந்த் விவாகரத்து மனுவில் கோளாறு

ஸ்ரீகாந்த் விவாகரத்து மனுவில் கோளாறு

Subscribe to Oneindia Tamil

நடிகர் ஸ்ரீகாந்த் தன் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி அளித்த மனுவில் சில குறைபாடுகள் இருந்ததால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. இதையடுத்து அந்த மனுவை ஸ்ரீகாந்த் வாபஸ் பெற்றார்.

ஸ்ரீகாந்த்திற்கும் தொழிலதிபர் மகள் வந்தானாவிற்கு காக்கிநாடாவில் ரகசிய திருமணம் நடந்தது. இதற்கிடையில் வந்தனாவின் குடும்பத்தினர் மீது சிபிஐ மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியதை அடுத்து திருமணம் நின்றது.

சில நாட்களுக்கு முன் வந்தனா ஸ்ரீகாந்த் வீட்டிற்குள் நுழைந்தார். இதனால் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர்.

தனக்கும் ஸ்ரீகாந்த்திற்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை காட்டியதால் ஸ்ரீகாந்த் தன்னை கைது செய்யக் கூடும் என்ற அச்சத்தில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வந்தனா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீகாந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் கைது செய்யக் கூடும் என கருதிய வந்தனாவும் முன் ஜாமீன் பெற்றார்.

இந் நிலையில் வந்தனாவிடமிருந்து விவகாரத்து கோரி ஸ்ரீகாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் வந்தனா தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அத்துமீறி வீட்டிற்கு நுழைந்த அவரால் தனக்கு மன வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிமன்ற பதிவுத் துறையில் பதிவு செய்யப்படாமல் இருந்தது. ஸ்ரீகாந்த் அளித்த மனுவில் சில குறைபாடுகள் இருந்ததால் அந்த மனு பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள கூறி ஸ்ரீகாந்த்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கறிஞருடன் வந்த ஸ்ரீகாந்த் தன் மனுவை வாபஸ் பெற்றார். வந்தனாவுடன் விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதால் மனுவிலுள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு விரைவில் புதிய மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

Please Wait while comments are loading...