twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனது நிர்வாண ஸ்கேனில் ஆட்டோகிராப் போட்டேன்..!- ஷாரூக் கிளப்பிய புயல்

    By Staff
    |

    SRK blames nude airport scanners
    லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரீக்கான் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து பிரிட்டனில் இந்த விவகாரம் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

    பாதிகாப்பு காரணங்களுக்காகவும், தீவிரவாத அச்சுறுத்தலைத் தடுக்கவும் பிரிட்டனின் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் வெளிநாட்டவர்களை முழு உடல் ஸ்கேன் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பிரிட்டன் சென்றிருந்த ஷாரூக்கானையும் இந்த இரு விமான நிலையங்களிலும் ஸ்கேன் செய்துள்ளனர். ஸ்கேன் செய்யும் போது முழு உடலும் நிர்வாணமாகவே திரையில் தோன்றும். இதனை எடுத்துப் பார்த்து பின்னர் அழித்துவிடுவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது.

    ஷாரூக்கானும் இந்த சோதனைக்குட்படுத்தப்பட்டார். பின்னர் அவரது உடலின் ஸ்கேன் படங்களை இரு பெண் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஷாரூக் கூறுகையில், "தன் உடலை நிர்வாணமாக ஸ்கேன் செய்த படத்தை, அதுவும் இரு பெண்களுக்கு முன்னால் பார்ப்பது யாருக்கும் தர்மசங்கடம்தான். எனக்கும் அப்படி இருந்தது. இருந்தாலும் அதைக் காட்ட முடியாதே. காரணம் எனது பெயர். இந்தப் பெயருக்காகவே அனைத்து விமான நிலையங்களிலும் நான் தடுக்கப்படுகிறேன். இது பழகிப்போக ஆரம்பித்துவிட்டது. மத ரீதியான அவமானப்படுத்தல்களுக்கு முன் ஒரு தனி மனிதனின் சுதந்திரம், உரிமை என்பதெல்லாம் பெரிய விஷயமா என்ன...

    இந்த ஸ்கேன் படங்களைக் காட்டிய பெண் அதிகாரிகளுக்கு பதிலாக, அந்த ஸ்கேன் படத்திலேயே எனது கையெழுத்தை ஆட்டோகிராபாக போட்டுவிட்டு வந்தேன்" என்றார் ஷாரூக், கோபமும் நக்கலும் கலந்த தொனியில்.

    பிரிட்டன் மறுப்பு:

    ஷாரூக்கான் தனது இந்த அனுபவத்தையே பிபிசி காமெடி ஷோவிலும் தெரிவித்தார். உடனே ஷாரூக்கானின் இந்த பேச்சுக்கு பிரிட்டிஷ் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்த மாதிரி ஸ்கேன் படங்களை யாருக்கும் காட்டுவதில்லை. இரண்டு நிமிடங்களுக்குள் அழித்துவிடுவதுதான் அங்குள்ள நடைமுறை. எனவே படங்களை அவர் பார்த்திருக்க முடியாது என்று கூறியுள்ளது.

    ஆனால் ஷாரூக் தான் சொன்னது உண்மையே என்றும் அதற்கு ஆதாரமாக அந்த ஸ்கேன் படங்களின் நகல்களையும் வெளியிட்டுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X