»   »  ஸ்ருதி கமல் நடிக்க ரெடி?

ஸ்ருதி கமல் நடிக்க ரெடி?

Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த பிலிம்பேர் பத்திரிக்கையின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவுக்கு வந்த அத்தனை பேரையும் ஒரு இளம் பெண் வெகுவாக கவர்ந்தார். அவர் வேறு யாருமல்ல கலைஞானி கமல்ஹாசனின் மூத்த புதல்வி ஸ்ருதி கமல்தான்.

கண்ணைப் பறிக்கும் கருப்பு நிற உடையில், கார்ஜியஸ் லுக்கில் படு கலக்கலாக வந்திருந்தார் ஸ்ருதி.

பத்திரிக்கையை தொடங்கி வைத்தவர் விஜய். ஆனால் அக்கார்ட் மெட்ரோபாலிடன் ஹோட்டலில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டது ஸ்ருதியின் ஸ்டன்னிங் லுக்.

ஸ்ருதியின் அழகுத் தோற்றத்தைப் பார்த்து அசந்து போன அத்தனை பேரும் அவரையே அடிக்கடி திரும்பிப் பார்த்தவண்ணம் இருந்தனர்.

பத்திரிக்கை புகைப்படக்காரர்களுக்கோ செம சந்தோஷமாகி விட்டது. வளைத்து வளைத்து ஸ்ருதியை ஷூட் செய்து தள்ளினர். அவர்களை ஸ்ருதி தடுக்கவில்லை, மாறாக, நன்றாக போஸ் கொடுத்து ஒத்துழைத்தார்.

என்ன நிகழ்ச்சிக்கு வந்தோம் என்பதையே பலரும் மறந்து விட்டு ஸ்ருதியுடன் பேசவும், அவரது அழகுத் தோற்றத்தைப் பார்த்து ரசிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.

படு ஜாலி மூடில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்ருதி. தன்னிடம் வந்து பேசிய அனைவரிடமும் படு இயல்பாக, பேசினார். தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பியவர்களுக்கு சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார்.

அெமரிக்காவில் இசை படித்துவிட்டு சமீபத்தில் தான் ஊர் திரும்பியிருக்கிறார் ஸ்ருதி. இசையில் பெரிய இடத்தைப் பிடிக்க படு தீவிரமாக உள்ளாராம்.

சமீபத்தில்தான் ஒரு ஆல்பத்தையும் ரெடி செய்தார். விரைவில் படங்களுக்கு இசையமைக்கவும் ஆர்வமாக உள்ளாராம்.

அப்பா கமல் தயாரிப்பில் விரைவில் ஸ்ருதியின் இசை அரங்கேற்றம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இவ்ளோ அழகா இருக்கீங்களே, நடிப்பீர்களா என்று ஸ்ருதியிடம் கேட்டபோது, கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல், அது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அழகாக சிரித்தபடி பதிலளித்தார் கமல் குடும்பத்தின் மோனலிசா.

கண்ணு படப் போகுது, சுத்திப் போட்டுடுங்க கமல்ஜி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil