Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தாடி இல்லாத சசிகுமாரை உள்ளே விட மறுத்த ஸ்டார் ஹோட்டல் - ருசிகர சம்பவம்
சென்னை: தாடி இல்லாத இயக்குநர் சசிகுமார் எப்படி இருப்பார் என யாருக்குமே தெரியாது. ஏன் சினிமா வட்டாரங்களில் கூட அவரை அப்படி ஒரு தோற்றத்தில் யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.
ஆனால் ஒரு படத்தின் டெஸ்ட் ஷூட்டிற்காக சசிகுமார் தாடி எடுத்துவிட்டு ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நுழைய அவரை அடையாளம் தெரியாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இச்சம்பவத்தை பேட்டி ஒன்றில் சசிகுமார் நகைச்சுவையாகத் தெரிவித்திருக்கிறார்.
தள்ளிப்
போகிறதா
பொன்னியின்
செல்வன்..
ஜெயம்
ரவியின்
அகிலன்
பட
ரிலீஸ்
தேதியால்
ரசிகர்கள்
குழப்பம்!

தாரை தப்பட்டை
தாரை தப்பட்டை திரைப்படத்திற்காக இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தாடி எடுத்துவிட்டு, நீண்ட தலைமுடியுடன் ஒரு டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றிருக்கிறார் இயக்குநர் சசிகுமார். டெஸ்ட் ஷூட் முடித்துவிட்டு நேராக இயக்குநர் சமுத்திரக்கனியிடம் அதனைக் காண்பிக்க அவருக்குப் போன் செய்திருக்கிறார். சமுத்திரக்கனியோ நான் ஒரு குறிப்பிட்ட ஸ்டார் ஹோட்டலில் இருக்கிறேன். அங்கு வந்துவிடு எனத் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டார் ஹோட்டலில் நடந்த சோகம்
நேராக ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்ற சசிகுமாரை ஹோட்டல் நிர்வாகம் வாசலிலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறது. அழுக்கு வேஸ்டியும், நீண்ட தலைமுடியும், காலில் செருப்புமாக இருந்த சசிகுமாரை சந்தேகம் கொண்டு உள்ளே விட மறுத்திருக்கிறார்கள். பின்னர் சமுத்திரக்கனிக்கு அழைத்து, "சகோ என்னை உள்ளே விட மறுக்கிறார்கள். நீங்கள் கீழே வாருங்கள்" என அழைத்திருக்கிறார். பின்னர் சமுத்திரக்கனி கீழே வந்து பார்த்துவிட்டு, சசிக்குமாரின் தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியாகியிருக்கிறார். "எனக்கே அடையாளம் தெரியவில்லை. பின் எப்படி இவர்களுக்குத் தெரியும்" என ஆச்சரியப்பட்டிருக்கிறார் சமுத்திரக்கனி. இச்சம்பவத்தை நினைவுகூர்ந்த சசிகுமார் இதனால் தான் தாடி இல்லாமல் நடிப்பதில்லை என அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் டூ நடிகர்
சுப்புரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் அதே திரைப்படத்தில் ஜெய் நண்பனாக நடிகராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சசிக்குமார். அதன் பின்னர் நாடோடிகள், குட்டிப்புலி, சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் அவரை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியது. என்றாலும், தாடி எடுக்காமல் எப்போதும் ஒரே தோற்றத்திலும், ஒரே மாடுலேசன் வசன உச்சரிப்பிலும், நடித்துக் கொண்டிருந்த அவரது நடிப்பு போக போக சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. இதனால் அவரது நடிப்பின் மீதிருந்த ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் லேசாகக் குறையத் தொடங்கியது. அதன் பின்னர் சசிகுமார் கதாநாயகனாக நடித்த பல படங்கள் வியாபார ரீதியில் அவ்வளவு வரவேற்பினைப் பெறவில்லை. என்றாலும், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்திலும், ஜோதிகாவுடன் உடன்பிறப்பே திரைப்படத்திலும் நடித்து தனது இருப்பை உறுதி செய்து கொண்டார்.

மீண்டும் இயக்குநர்
இந்நிலையில், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த சசிகுமார் கதை எழுதி வருகின்றார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த முறை திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிசாக இயக்க சசிகுமார் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அதில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்தவிருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.