»   »  மீரா, காவ்யா, நவ்யா .. 20-20!

மீரா, காவ்யா, நவ்யா .. 20-20!

Subscribe to Oneindia Tamil
Navya
மலையாளத் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக முன்னணி நடிகர், நடிகையர்கள் ஒன்று சேர்ந்து நடிக்கும் 'டுவென்டி 20' படத்தின் தொடக்க விழா கொச்சியில் வருகிற வெள்ளிக்கிழமை நடக்கிறது.

மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) நல நிதிக்காக முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து ஒரு படத்தை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்தப் படத்தை அம்மாவும், நடிகர் திலீப்பின் கிராண்ட் புரடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு டுவென்டி 20 என்று டைமிங்காக பெயரிட்டுள்ளனர்.

படத்தை ஜோஷி இயக்குகிறார். படத்தில் நடிக்கும் கலைஞர்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல் நடிக்கவுள்ளனராம்.

இப்படத்தின் தொடக்க விழா வருகிற வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெறுகிறது.

பழம்பெரும் நடிகர் மது, மெகாஸ்டார் மம்முட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம், சுரேஷ்கோபி, பிருத்விராஜ், கலாபவன் மணி, ஊர்வசியின் கணவர் மனோஜ் கே. ஜெயன், சரிதாவின் கணவர் முகேஷ், ஜெயசூர்யா, பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித், கேப்டன் ராஜ், ரஹ்மான், சாய்குமார் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் நடிக்கவுள்ளனர்.

அதேபோல நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன், பத்மப்ரியா, பாவனா, சம்விருத்தா, விமலா ராமன், கல்பனா, லட்சுமி கோபாலசாமி, சுகுமாரி உள்ளிட்ட நடிகைகளும் படத்தில் இடம் பெறுகின்றனராம்.

'சக்ஸஸ் சிக்சர்' அடிக்க வாழ்த்துவோம்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil