»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பிரசாந்த் நடிக்கும் ஸ்டார் படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் கேரக்டரில் ஒருவர் வருகிறார். அவருக்கு மிமிக்ரி புகழ் மயில்சாமி குரல் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

ஸ்டார் படத்தின் டைரக்டர் பிரவீண் காந்த், ரட்சகன் என்ற படத்தை இயக்கியவர். பாடல்கள் மட்டுமே பிரகாசித்த இந்த படம் சரியாகப் போகாததால் பிரவீண் காந்த்தும் சரியாகப் பேசப்படவில்லை.

ஸ்டார் படத்தில் பிரவீண் காந்த்தும் தலை காட்டியிருக்கிறார் - சின்ன ரோலில். சொந்தக் குரலில் பேசி நடித்தும் இருக்கிறார்.

ஸ்டார் படத்திற்கு மியூசிக் ஏ.ஆர்.ரஹ்மான், பிரசாந்த்தின் ஜோடி ஜோதிகா. ரொம்ப நாளாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம், ரஹ்மான் பாட்டுக்களைப் போட்டுக் கொடுத்து விட்டதால் சுறுசுறுப்பாக முடிந்து கொண்டிருக்கிறது. பாடல்கள் ரிலீசாகி விட்டன. விரைவில் வெள்ளித் திரையில் ஸ்டார் ஜொலிக்குமாம்.

Read more about: act, acting, jothika, prashanth, praveenkanth, star

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil