»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஜூலை மாத இறுதியில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நட்சத்திரக் கலை விழாவை முன்னிட்டு 5நாட்களுக்கு சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தக் கலை விழாவில்தமிழகத்தின் இரு பெரும் சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரான நடிகர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்களுடைய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த கலைஞர்களின் நலத் திட்டங்களுக்காக மலேசியாமற்றும் சிங்கப்பூரில் "ஸ்டார் நைட் - 2002" என்ற நட்சத்திர இரவு கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

"பாபா" ஷூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் உடனடியாகச் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் கமலை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த போது, அவரும் இந்தக் கலை விழாவில் கலந்துகொள்வதற்குச் சம்மதித்தார்.

மலேசியா அரசு விருந்து:

மொத்தம் 60 நடிகர்-நடிகைகள், டான்ஸ் மாஸ்டர் கலா தலைமையில் 40 நடனக் கலைஞர்கள் உள்பட 170 பேர்மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் ஜூலை 25ம் தேதி சென்னையிலிருந்து மலேசியா புறப்படுகிறோம்.

ஜூலை 26ம் தேதி மலேசிய அரசு எங்களுக்கு விருந்தளிக்கிறது.

பின்னர் 27ம் தேதி இரவு மலேசியாவில் உள்ள புத்ரா உள் விளையாட்டு அரங்கில் "ஸ்டார் நைட் - 2002"நடைபெறும். இந்த அரங்கில் 15 ஆயிரம் பேர் வரை ஒரே சமயத்தில் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.

அதற்கு மறுநாளே நாங்கள் சிங்கப்பூர் செல்கிறோம். அன்றைய இரவு அங்குள்ள எக்ஸ்போ-2 அரங்கில் கலைவிழா நடைபெறும். இவ்வரங்கில் 9,500 இருக்கைகள் உள்ளன.

சிறப்பு பாதுகாப்பு:

நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் தங்குவதற்காக ஒரே ஓட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 90 பேர் கொண்ட சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர் பாதுகாப்புப் பணிகளைக் கவனித்துக் கொள்வார்கள்.

நிகழ்ச்சித் தொகுப்பு - ராதிகா:

"ஸ்டார் நைட் - 2002" நிகழ்ச்சிகளை நடிகை ராதிகா தொகுத்து வழங்குவார்.

நடிகர் ராதாரவி மற்றும் இயக்குநர் கே.ஆர். ஆகிய இருவரும் நாடகங்களுக்கான பணிகளைக் கவனித்துக்கொள்வார்கள்.

சென்னை டி.வியில் ஒளிபரப்பு:

இந்த நட்சத்திரக் கலைவிழா நிகழ்ச்சிகளை சென்னையில் டி.வி. மூலம் ஒளிபரப்புவதற்கும் நாங்கள் அனுமதிவாங்கியுள்ளோம்.

ராடான் டி.வி. நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.

5 நாட்களுக்கு ஷூட்டிங் ரத்து:

முக்கியமாக நாங்கள் மலேசியா-சிங்கப்பூர் செல்லும் இந்த ஐந்து நாட்களிலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள்எதுவும் நடைபெறாது. கலை விழாவையொட்டி இந்த ஐந்து நாட்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் ஜூலை 29ம் தேதி நாங்கள் அனைவரும் சென்னை திரும்புவோம்என்றார் விஜயகாந்த்.

விஜயகாந்த் பேட்டியின் போது நடிகர்கள் நெப்போலியன், சரத்குமார், முரளி, தியாகு மற்றும் நடிகை ராதிகாஆகியோர் உடனிருந்தனர்.

Please Wait while comments are loading...