»   »  சிபிசிஐடி விசாரணை கோரும் ஸ்டெல்லா

சிபிசிஐடி விசாரணை கோரும் ஸ்டெல்லா

Subscribe to Oneindia Tamil

தனது கணவர் ஐசக் மற்றும் நடிகை தேவிப்பிரியா மீதான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐக்கின் முதல் மனைவி ஸ்டெல்லா வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஸ்டெல்லாவைத் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தவர் கோழிப்பண்ணை அதிபர் ஐசக். அவரும், நடிகை தேவிப்பிரியாவும் திருமணம் செய்வதாக இருந்த நேரத்தில், திடீரென ஸ்டெல்லா கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெல்லாவைத் தொடர்ந்து ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினியும் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். பின்னர் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு படிப்படியாக ஒவ்வொன்றிலும் முன்ஜாமீன் கிடைத்து வெளியே வந்தனர்.

இந்த நிலையில், தனக்கு ஐசக் திருப்பித் தர வேண்டிய வரதட்சணை பொருட்களை அவர் இன்னும் திருப்பித் தரவில்லை என்று கூறி இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி ஸ்டெல்லா உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கும், ஐசக்கிற்கும் செங்கல்பட்டு நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் எனது திருமணத்தின் போது பெறப்பட்ட 45 சவரன் நகை, பைக், ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அவற்றை ஐசக் திருப்பித் தரவில்லை.

ஐசக்கும், அவர் தாயாரும் குளோரியும் இதுவரை என்னுடைய வரதட்சணை பொருட்களை தர மறுக்கிறார்கள் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை விசாரித்த அடையாறு உதவி ஆணையர் அரி, இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் ஐசக்கிற்கு ஆதரவாக செயல்பட்டு முன்ஜாமீன் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டனர்.

எனவே அவர்கள் விசாரித்தால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil