»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சினிமா ஒதுக்கிவிட்டதால், டிவி நாடகம் பக்கம் போய் அதுவும் சரிப்பட்டு வராததால், நடனத்தில் மட்டுமே கவனம் செலுத்திவந்த சுகன்யா இப்போது இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

பாரதிராஜாவின் "புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான இந்த கலாஷேத்ரா மாணவி, நல்ல நடிகையாக தமிழில் ஒருரவுண்டு வந்தார். பீக்கில் இருந்த நேரத்தில் மன்மதலீலைகளுக்குப் பெயர் போன அப்போதைய ணப்ப அமைச்சர் ஒருவருடன்கிசுகிசுக்கப்பட்டார். (இந்த ணப்ப ஆசாமி மன்னார்குடி பார்டிகளுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக பணம் குவித்து, இன்றும்கோடிகளில் புரண்டு வருபவர்).

அமைச்சர் ஆளா.. நமக்கு எதுக்கு வம்பு என ஹீரோக்கள் சுகன்யாவிடம் இருந்து விலகி நிற்க, பீல்டு அவுட்டாகி விட்டார்.

அமைச்சர் மாஜியானார். இதையடுத்து சினிமாவில் மீண்டும் முயன்று பார்த்தார் சுகன்யா. அதில் வெற்றி கிடைக்காமல் போனதால்,டிவி பக்கம் வந்தார். சில சீரியல்களில் பேசப்படும் கேரக்டர்கள் கிடைத்தன. மற்றவை எல்லாமே டொச்சு ரோல்கள் தான்.

இதனால் தனது பரதநாட்டியத்தை கையில் எடுத்தார் சுகன்யா. நாட்டிய நிகழ்ச்சிகளுக்காக சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா எனபறந்து பறந்து போய் ஆடிக் கொண்டிருந்தார். இது எத்தனை காலத்துக்கு ஓடும் என்ற சந்தேகம் வந்துவிட்டதோ என்னவோ,இப்போது இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் சுகன்யா.

இவர் சமீபத்தில் "அழகு என்ற பெயரில் 10 பாடல்கள் அடங்கிய பாடல் கேசட் ஒன்றை வெளியிட்டார். இந்தப் பாடல்களைஎழுதியதும், அதற்கு இசையமைத்ததும் இவர் தான். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்தப் பாடல் கேசட்டின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் பாரதிராஜா, பாடலாசிரியர் வாலி,நடிகர் நெப்போலியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் நாகேஷ், நடிகை லட்சுமி, பாடகி எஸ்.ஜானகி, கங்கைஅமரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாடல் கேசட்டை வாலி வெளியிட, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார். சி.டியை டைரக்டர்பாரதிராஜா வெளியிட நடிகை லட்சுமி பெற்றுக் கொண்டார்.

சுகன்யாவின் இந்த ஆல்பத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உன்னி கிருஷ்ணன், எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்.

விழாவில் நடிகை..ஸாரி..இசையமைப்பாளர் சுகன்யா பேசும்போது, சில மாதங்களுக்கு முன் வீட்டில் நான் தூங்கி விழித்தவுடன்எனக்குள் ஒரு பிளாஷ் அடித்தது. சில வரிகள் என் மனக்கண்ணில் ஓடின. அதை அப்படியே எழுதி வைத்துக் கொண்டேன்.

பிறகு ஒரு தடவை காரில் சென்று கொண்டிருந்த போது அதே போல ஒரு பிளாஷ். அப்போதும் பாடல் வரிகள் வந்தது. அதுஎப்படி என்று எனக்குத் தெரியவில்லை. தெய்வ அருளால் அது நிகழ்ந்திருக்கிறது.

நான் இந்த மேடையில் நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய குருநாதர் பாரதிராஜா தான். நானும்,நெப்போலியனும் அவரால் ஒரே படத்தில் அறிமுகமானோம். நடிப்பு வராவிட்டால் பாரதிராஜா சார் அடிப்பார், திட்டுவார் என்றுகேள்விப்பட்டிருக்கிறேன். இதனால் படப்பிடிப்புக்கு வரும்போது எனக்கு ரொம்ப பயமாக இருக்கும்.

ஆனால் அவரிடம் அந்தப் படத்தில் நான் அடியே வாங்கவில்லை. அனேகமாக பாரதிராஜா சாரிடம் அடி வாங்காத நடிகைஎன்றால் அது நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

சுகன்யாவின் பேச்சை வெகுவாக ரசித்த பாரதிராஜா பேசுகையில், சுகன்யா சரியான விதை. அவர் சினிமாவுக்கு இசை அமைக்கும்காலம் விரைவில் வரும் என்றார்.

கவிஞர் வாலி பேசும்போது, சுகன்யாவுக்கு இறைவன் அருள் இருப்பதால் தான் பாடல் எழுதும் திறமையும், இசை அமைக்கும்திறமையும் வந்திருக்கிறது என்று தன் பங்குக்கு எடுத்துவிட்டார்.

நடிகையாக ரொம்ப பிஸியாக இருந்தபோது சுகன்யாவுக்கு வராத இந்த பிளாஷ், இப்போது வீட்டில் சும்மா இருக்கும்போதுவந்தது ஏனோ?

Read more about: music director, suganya, tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil