மணிரத்னத்தை டென்ஷனாக்கி கெட்ட வார்த்தை பேச வைத்த அன்பான மாணவி சுதா கொங்காரா - சுஹாசினி

சென்னை: சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமைக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்காரா.

பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை நடிகர் சூர்யாதான் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தனக்கும் இயக்குநர் மணிரத்தினம் அவர்களுக்கும் உள்ள குரு-மாணவி உறவு பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றைக் கூறியிருக்கிறார் சுதா.

துணை இயக்குநர்

துணை இயக்குநர்

பெண் இயக்குநர் என்று அழைப்பதையே விரும்பாதவர் சுதா கொங்காரா. உண்மைதான், ஒரு ஆண் இயக்கினால் ஆண் இயக்குநர் என்று சொல்வதில்லை. ஒரு பெண் இயக்கினால் மட்டும் ஏன் அப்படி கூற வேண்டும்? ஆண், பெண் என்கிற பேதமின்றி இயக்குநர் என்று பொதுவாக அழைப்பதே சரியானதாக இருக்கும். இயக்குநர்கள் மணிரத்தினம் மற்றும் பாலாவிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர் சுதா. மணிரத்தினத்திடம் துணை இயக்குநராக பணியாற்றிய பின் ஒரு தெலுங்கு படத்தையும், தமிழில் துரோகி என்கிற படத்தையும் இயக்கியிருந்தார்.

பரதேசி அனுபவம்

பரதேசி அனுபவம்

துரோகி திரைப்படம் நல்ல விமர்சனம் பெற்றிருந்தாலும் வணிக ரீதியாக அது வெற்றி பெறவில்லை. எனவே மீண்டும் பாலா அவர்களின் பரதேசி திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். அதன் பின்னர் அவர் எடுத்த திரைப்படம்தான் இறுதிச்சுற்று. அந்த படம் இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் அவரை கொண்டுபோய் சேர்த்தது. பின்னர் வெங்கடேஷ் நடிப்பில் அந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதனையும் சுதா கொங்காரதான் இயக்கினார்.

அடுத்த சூப்பர் ஹிட்

அடுத்த சூப்பர் ஹிட்

பின்னர் நேரடியாக ஓடிடியில் வெளியான சூரரை போற்றை திரைப்படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் பணி புரிந்த அனைவருமே அவர் ஒரு ஆளுமையான இயக்குநர் என்று கூறியிருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் சூர்யா சுதா கோங்காராவை ட்ரில் மாஸ்டர் என்று பாராட்டி பேசியிருந்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் தேசிய விருதுகளையும் அள்ளிக் குவித்தது. அந்த வெற்றியின் காரணமாக தற்சமயம் ஹிந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.

பிடித்த மாணவி

பிடித்த மாணவி

இந்நிலையில் நடிகை சுகாசினியும் சுதா கோகாராவும் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்பொழுது, ஒரு நாள் சுஹாசினி மேடம் என்னிடம் வந்து மணிரத்தினம் இதுவரை கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியதில்லை எந்த பெண்ணையும் லேடி என்று குறிப்பிட்டதில்லை. ஆனால் உன்னை லேடி என்று குறிப்பிட்டு பேசுகிறார் அவரையே எப்படி அப்படி பேச வைத்தாய் என்று கேட்டபோது, நான் நிறைய அதிகப்பிரசங்கித்தனம் செய்து அதிக திட்டுகள் வாங்குவேன் என்று கூற, தனக்கு மிகவும் பிடித்தவர்களைத்தான் மணிரத்தினம் அதிகம் திட்டுவார். அந்த வகையில் சுதாவும் அவருக்கு மிகவும் பிடித்த மாணவி என்பதால்தான் திட்டுவார் என்று இருவருமே அந்த நிகழ்ச்சியில் விளக்கமளித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X