»   »  வடிவேலுவின் ஊர்வசி

வடிவேலுவின் ஊர்வசி

Subscribe to Oneindia Tamil

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வந்த சுஜாவுக்கு இப்போது ஊர்வசி வேஷம் கொடுத்து நடிப்புக்கும் வாய்ப்பு கொடுத்து அசத்தியுள்ளனராம்.

வடிவேல் 2வது முறையாக ஹீரோவாக, மூன்று வேடங்களில் நடிக்கும் படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். எமன், இந்திரன், சாதாரண மனிதன் என மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் வடிவேலு நடிக்கும் இப்படத்தை இயக்குவது தம்பி ராமையா.

இப்படத்தில் லண்டனைச் சேர்த்த தீத்தா சர்மா என்பவர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கிறார். ஊர்வசி வேடத்தில் நடிப்பவர் சுஜா.

முதலில் இவருக்கு இப்படத்தில் குத்துப் பாட்டு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாம். அவரும் வந்து அம்சமாக ஆடிக் கொடுத்துள்ளார். ஆனால் தம்பி ராமையா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஊர்வசி வேடத்தையும் சுஜாவையே செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதனால் எதிர்பாராத இன்டர்வியூவுக்குப் போய், எதிர்பாராத வேலை கிடைத்த பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் சுஜா.

சுஜாவைப் பற்றி வரலாறு ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். என்னடி முனியம்மா ரீமிக்ஸ் பாட்டுக்கு அம்சமான குத்தாட்டம் போட்டவர்தான் சுஜா. இதுதவிர பல படங்களிலும் படு பிசியாக குத்துப் பாட்டுக்களுக்கு ஆடிப் பாடி வருகிறார்.

இதுதவிர திருத்தம் படத்திலும் சுஜாவின் குஜாலான குத்துப் பாட்டு வருகிறதாம். பள்ளிக்கூடம், வள்ளுவன் வாசுகி, கில்லாடி, சிங்கக்குட்டி, அம்முவாகிய நான் என சுஜாவின் கால்ஷீட் புக் நிரம்பி வழிகிறதாம்.

திருத்தம் படத்தில வெறும் குத்துப்பாட்டோடு இல்லாமல், நர்ஸ் வேடத்திலும் கிறங்கடிக்கிறாராம் சுஜா. அதேபோல வள்ளுவன் வாசுகி படத்தில் சுஜாவுடன் சேர்ந்து இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரும் இணைந்து குத்தாட்டம் ஆடியிருக்கிறாராம்.

காட்டுமன்னார்குடியில் இந்தப் பாட்டை படமாக்கியபோது அந்த ஊரே கூடி வேடிக்கை பார்த்ததாம். சுஜாவை ரசிக்க மட்டுமல்லாது, அந்த ஊரில் நடந்த முதல் ஷூட்டிங்கே இதுதான் என்பதாலும் பாட்டு முடியும் வரை படு அமைதியாக இருந்து சுஜாவின் சூப்பர் ஆட்டத்தை ரசித்தார்களாம்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், போஜ்புரி என சுஜாவின் குத்தாட்டம் படு அமோகமாக இருக்கிறதாம், மலையாளத்தில் 7 படங்களிலும், கன்னடத்தில் 14 படங்களிலும் ஆடிப் பாடி விட்டாராம்.

சுஜாவுக்குப் பல பாஷைகள் தெரியுமாம். இதனால் எந்த மொழிப் படமாக இருந்தாலும் அசத்தி விடுவேன். குத்தாட்டத்தோடு சின்னச் சின்ன கேரக்டர்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கும் சுஜாவுக்கு பிடித்த கேரக்டர் எது தெரியுமா, குறத்தி வேடம்தானாம்.

கிளாமர், கேரக்டர் என பலவிதமான கலவைகளில் தென்னிந்திய சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டுவதே தனது லட்சியம் என்று கூறும் சுஜா, தான் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் தொல்லை தராத நல்ல பிள்ளை என்று பெயரெடுத்துள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil