twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ 40 கோடியில் படமாகும் சுஜாதாவின் என் இனிய இயந்திரா!

    By Shankar
    |

    சென்னை: மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் விஞ்ஞானக் கதையான என் இனிய இயந்திரா மற்றும் அதன் தொடர்ச்சியான மீண்டும் ஜீனோ போன்றவற்றை ரூ 40 கோடியில் திரைப்படமாக எடுக்கிறார்கள்.

    சென்னையை சேர்ந்த பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோஸ் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

    ஷங்கர் முதலில் முயற்சித்தது

    ஷங்கர் முதலில் முயற்சித்தது

    'என் இனிய இயந்திரா' மற்றும் 'மீண்டும் ஜீனோ' இரண்டுமே பத்திரிகையில் தொடர்களாக வந்தவை. கமலை வைத்து ஷங்கர் இயக்கத் திட்டமிட்டது இந்தக் கதைகளைத்தான். ஆனால் அறிவிப்போடு அது நின்றுபோனது. பின்னர் ரஜினிக்கேற்ற மாதிரி கதையை மாற்றினார் சுஜாதா. அதுதான் எந்திரனாக வந்தது.

    இப்பதான் சரியான நேரம்

    இப்பதான் சரியான நேரம்

    இந்த கதைகள் வெளிவந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படியெல்லாம் மாறும் என்பதை நமக்கு கண்முன் காட்டியது. விஞ்ஞான வளர்ச்சி பற்றிய விவரமான இந்த கதைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாக உள்ள இந்த காலகட்டமே சிறந்த காலம் என தெரிவிக்கிறார் பிக்செல் கிராப்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும், இப்படங்களின் இயக்குனருமான சித்தார்த்.

    விர்ச்சுவல் கிராபிக்ஸ்

    விர்ச்சுவல் கிராபிக்ஸ்

    விர்ச்சுவல் கிராபிக்ஸ் என்ற தொழில்நுட்பம் மூலம் நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்துவிட்டு, இடம், பொருள் ஆகிய மற்ற விஷயங்களை தொழில்நுட்ப முறையில் ஒரு இடத்தில் இருந்தே படமாக்கும் இந்த முறையால் திரைப்படம் படைப்பது எளிதாகும் என்கிறார் சித்தார்த்.

    ரூ 40 கோடி

    ரூ 40 கோடி

    மிக பிரம்மாண்ட முறையில் தயாரிக்கப்படும் 'என் இனிய இயந்திரா' நாற்பது கோடி ரூபாயில் தயாரிக்கப்படுகிறது. சென்னை தவிர, இங்கிலாந்தில் பைரேட் ஆப் தி கரீபியன், அயர்மேன் 2, மற்றும் கோச்சடையான் படங்களின் மோஷன் கேப்சர் தொழில்நுட்ப வல்லுனர்கள் இயங்கும் சென்ட்ராய்டு மோஷன் கேப்சர் ஸ்டுடியோவிலும் படமாக்கப்படுகிறது.

    English summary
    Popular writer late Sujatha's En Iniya Iyanthira and Meendum Jeano to be filmed by a top animation company with Rs 40 cr budget.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X