»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

போலீஸ் வேலையில் சேர முயன்று தோற்ற சுஜாதா என்ற ஐஸ்கிரீம் பெண்ணை தனது அடுத்த படத்தின் ஹீரோயின்ஆக்கத் திட்டமிட்டுள்ளர் இயக்குனர் சேரன்.

ஆட்டோகிராபை தொடர்ந்து சேரன் இயக்கும் படம் டூரிங் டாக்கீஸ் (விரைவில் தமிழில் பெய் மாற்றம்செய்யப்படவுள்ளது). இதில் மீண்டும் தானே ஹீரோவாக நடிக்கும் சேரன், ஹீரோயினாக மீண்டும் கோபிகாவையேபுக் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், நாயகியை மாற்றினால் தான் படத்துக்கு பிரஷ் லுக் இருக்கும், இல்லாவிட்டார் ஆட்டோகிராப் பார்ட்-2மாதிரி ஆகிவிடும் என நண்பர்கள் எடுத்துச் சொல்ல, கோபிகாவுக்குப் பதிலாக புதிய ஹீரோயினாக ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருந்தார் சேரன்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் தமிழக பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தைப் பிடித்தார் அட்டகாசமான லுக்கொண்ட ஒரு இளைஞி.

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் போலீஸ் தேர்வுக்காக வந்த பெண்களில் பார்க்க பளிச் என்று இருந்த இவரைகேமராவில் சுட்டுத் தீர்த்தனர் போட்டோ ஜர்னலிஸ்டுகள்.

மறுநாள் பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தை அலங்கரித்தார். அப்போது இவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.ஆனால், அவரோ போலீஸ் செலக்ஷனில் முதல் சுற்றிலேயே அவுட் ஆகிவிட்டார். ஓட்டப் பந்தய போட்டியில்கலந்து கொண்டு பாதி தூரம் ஓடி மயங்கி விழ, போலீஸ் தேர்வில் இருந்து ரிஜெக்ட் செய்யப்பட்டார்.

ஆனால், பத்திரிக்கைகளில் இவரது படத்தைப் பார்த்த சேரனுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட, அவரைஹீரோயினாக்க முடிவு செய்து, இந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கினார். இந்தவிவரம் நிருபர்களுக்குத் தெரியவர, சேரன் தரப்புக்கு முன்னதாகவே சுஜாதாவைத் தொடர்பு கொண்டுபேசிவிட்டனர்.

தன்னை சேரன் சினிமாவில் நடிக்க வைக்கத் திட்டமிட்டிருப்பது குறித்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ள சுஜாதாவும்அவரது குடும்பத்தினரும் பேட்டிகள் கொடுத்தவண்ணம் இருக்க, சேரன் தரப்போ மேக்-அப் டெஸ்ட், போட்டோசெஷன் நடத்தித் தான் எதையும் முடிவாகச் சொல்ல முடியும் என விளக்கம் தந்துள்ளது.

இந்த விஷயத்தில் பத்திரிக்கைகள் மிகவும் அவசரப்படுவதாகக் கருதும் சேரன், மேக்கப் டெஸ்ட் தவிர நடிப்புடெஸ்ட் என இன்னும் பல கட்டங்களைத் தாண்டினால் தான் சுஜாதாவுக்கு சான்ஸ் தரப்படும் என விளக்கமளித்துவருகிறது.

இதில் ஏதாவது ஒன்றில் சுஜாதா தேறாவிட்டாலும் கூட படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்து விடும். அப்படிஒருவேளை சுஜாதா நிராகரிக்கப்பட்டால் அவரது குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள், படத்தில் நடிக்கப்போகிறோம் என்ற நினைப்பிற்கு வந்து விட்ட சுஜாதாவும், அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகநேரிடும்.

படத்தில் நடிப்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படுவதற்குள் அவசரப்பட்டு பேட்டி கொடுக்கஆரம்பித்து விட்டார்களே என்று சேரன் தனது நெருக்கமானவர்களிடம் கவலையை பகிர்ந்து கொண்டதாகசொல்கிறார்கள்.

இது தொடர்பாக சுஜாதா குடும்பத்தினரிடம் சேரனின் உதவியாளரும் பேசியுள்ளார். இன்னும் பல டெஸ்ட்கள்உள்ளன. அவற்றில் நீங்கள் தேறினால் மட்டுமே நடிக்க முடியும். எனவே இதுகுறித்து அதிக அளவு பப்ளிசிட்டிசெய்ய வேண்டாம் என்று சுஜாதா குடும்பத்தினரிடம் சேரன் தரப்பு கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அடடே !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil