»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சுள்ளான் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு விலக்கிக் கொண்டுள்ளது.

இதையடுத்து படம் வரும் சனிக்கிழமை ரீலீஸ் ஆகிறது.

கால்ஷீட் குளறுபடியால் தனுஷ் ஒப்பந்தமான பாதிப் படங்கள் பாதி முடிவடைந்த நிலையில் நின்று கொண்டிருக்க,அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனுஷ் முழு மூச்சாக சுள்ளான் படத்தில் நடித்தார். இதனால் தனுஷின் மற்றபடங்களை வாங்கிய வினியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் செய்தனர்.

இதனையடுத்து சுள்ளான் படத்துக்கு வினியோகஸ்தர்கள் சங்கம் தடை விதித்தது. இதனால் படம் முற்றிலும்முடிந்தும் ரிலீஸ் செய்ய முடியாமல் பெட்டியில் தூங்கிக் கொண்டுள்ளது. தனுஷ் தரப்பில் இருந்துவினியோகஸ்தர்கள் சங்கத்தை அணுகி,

இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன்பிறகு என்னுடை மற்ற படங்களுக்கு நல்ல மார்க்கெட் கிடைக்கும்.இதனால் வினியோகதர்களுக்கு லாபம்தான் என்று பேசிப் பார்த்தனர். ஆனால், அவர்கள் மசியவில்லை. அதோடுதனுசுக்கு ஆதரவாக நின்ற வட மாவட்டங்களின் 12 தியேட்டர்களுக்கும் தடை போட்டனர்.

இந்தத் தியேட்டர்களில் எந்தப் புதுப் படத்தையும் வினியோகிக மாட்டோம் என்றும் அறிவித்தனர்.

இதனால் கொதிப்படைந்த திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது சங்கத்தின் அவசரக் கூட்டத்தை சென்னையில்கூட்டினர்.

வினியோகஸ்தர்கள் சங்கம் விதித்துள்ள தடை உத்தரவை 25ம் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும்.இல்லாவிட்டால் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் சுள்ளான் திரைப்படத்தை நேரடியாக வாங்கி திரையரங்குகளில்வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

இதனையடுத்து வேறுவழியின்றி இப்போது வினியோகஸ்தர்கள் பணிந்துள்ளனர். சென்னை காஸ்மாபாலிடன்கிளப் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுள்ளான் படத்தை திரையிடஅனுமதிப்பது என்றும், இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் ட்ரீம்ஸ் படத்தை ரிலீஸ் செய்வது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

மேலும் கும்பகோணத்தில் உயிரிழந்த மாணவ,- மாணவியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியளிப்பதுஎனவும் முடிவெடுத்தனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil