»   »  அசத்தும் ரஜினி கார்ட்டூன்-சுல்தான்!

அசத்தும் ரஜினி கார்ட்டூன்-சுல்தான்!

Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் முதல் முறையாக அனிமேஷன் படத்தில் நடித்துள்ள சுல்தான்-தி வாரியர், அனிமேஷன் படத்தின் டிரெய்லர், சிவாஜி திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ரஜினி ரசிகர்களின் ஆர்வத்தை எகிற வைத்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அவரது இளைய மகள் செளந்தர்யா, புதிதாக அனிமேஷன் படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். சுல்தான்-தி வாரியர் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளில் உருவாக்கப்படும் இந்த அனிமேஷன் படத்தில் ரஜினிகாந்த் சாகச வீரனாக சித்தரிக்கப்பட்டு கலக்குகிறார். ரஜினிகாந்த் குறித்த முதல் அனிமேஷன் படம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்புகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த அனிமேஷன் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆட்லேப்ஸ் நிறுவனமும், செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கி வருகின்றன.

சுல்தான் அனிமேஷன் படத்தின் டிரெய்லர் காட்சி தற்போது சிவாஜி திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அனிமேஷன் டிரெய்லர் உள்ளது.

நீண்ட வாளுடன் தோன்றும் அனிமேட்டட் ரஜினிகாந்த், இது புதுசு கண்ணா என்று சொல்வது போல டிரெய்லர் உள்ளது. அடுத்த ஆண்டு இந்த அனிமேஷன் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் செளந்தர்யா.

டிரெய்லரிலேயே படு அசத்தலாக தோன்றுகிறார் ரஜினி என்பதால் மொத்தப் படமும் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் புதுசாகவே இருக்கும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...