»   »  நடிகை சுமா கேட்கும் சூப்பர் ஜீவனாம்சம்

நடிகை சுமா கேட்கும் சூப்பர் ஜீவனாம்சம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கணவரை விட்டுப் பிரிந்து வாழும் நடிகை சுமா ரங்கநாதன், மாதந்தோறும் கைச் செலவுக்கு ரூ. 2 லட்சம், மும்பையின் முக்கிய இடத்தில் வீடு, கார் உள்ளிட்டவற்றை ஜீவனாம்சமாக தனது கணவர் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மாநகர காவல் படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமான சுமா ரங்கநாதன், தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிப்படங்களில் நடித்தார். தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்திக்கு சென்றார். அங்கும் அவருக்கு படவாய்ப்புகள் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை.

கிளாமரில் வரைமுறையில்லாமல் நடித்தும் கூட சரியான பட வாய்ப்பு கிடைக்காததால், நடிப்பை விட்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பண்டி வாலியாவின் நட்பைப் பிடித்து அப்படியே கல்யாணமும் செய்து கொண்டார்.

பண்டிவாலியா ஏற்கனவே திருமணமானவர். ஆனால் அது தெரிந்தும் கூட சுமா, பண்டியை மணந்து கொண்டார். ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் பண்டிக்கும், சுமாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பண்டியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் சுமா.

இந்நிலையில் கணவரின் சொத்தில் பங்கு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சுமா. அதைப் பார்த்து அரண்டு போய் விட்டாராம் பண்டி. அதில் சுமா என்ன கூறியுள்ளார் தெரியுமா.

மும்பை பாலி ஹில்ஸில் ஒரு ஆடம்பர பங்களா தர வேண்டும். ஒரு கார் தர வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான பணம் தரவ வேண்டும். மாதாதந்திர கை செலவுக்கு ரூ. 2 லட்சம் தர வேண்டும் என அடுக்கியுள்ளார் சுமா.

இதுகுறித்து பண்டி கூறுகையில், சுமா ரங்கநாத் என்னுடைய குடும்ப நகைகளை எடுத்து சென்றதோடு லட்சக்கணக்கில் பணத்தையும் எடுத்து சென்றுள்ளார். அதை திருப்பி கேட்டததால் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இனி அவரோடு சேர்ந்து வாழபோவதில்லை. என்னுடைய சொத்துகளை திருப்பித் தர கோரி வழக்கு தொடரப் போகிறேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil