»   »  நடிகை சுமா கள்ளத் தொடர்பு- கணவர் பரபரப்பு புகார்

நடிகை சுமா கள்ளத் தொடர்பு- கணவர் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

நடிகை சுமா ரங்கநாத்துக்கு தனது உடற்பயிற்சியாளருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக அவரது கணவர் புகார் கூறியுள்ளார்.

தமிழில் பெரும் புள்ளி படம் முலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சுமா ரங்கநாத். பெங்களூரைச் சேர்ந்த மாடலான இவர் அதன் பின்னர் மாநகர காவல், புதுப்பாட்டு உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். அதன் பின்னர் இந்திக்கு சென்றுவிட்டார்.

இந்தியில் கவர்ச்சியில் புகுந்து விளையாடினர். பலருடனும் கிசுகிசுக்கப்பட்டார்.

இந்நிலையில் 41 வயதான இந்தி பட தயாரிப்பாளர் பன்டி வாலியாவைக் காதலித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி திருமணம் செய்து கொண்டார் சுமா. இத்தனைக்கும் பண்டி வாலியா 10 ஆண்டுகளுக்கு முன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தவர்.

சுமா-பண்டி தம்பதி சிறிது காலம் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினர். ஆனால், சில காலமாக கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தனர். ஆனால் இதற்கான கரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை.

இந் நிலையில் சுமா தனக்கு மாதம் ரூ. 2 லட்சம் ஜீவனாம்சமும், மும்பையில் ஒரு வீடும், காரும் தர வேண்டும் என்று கோரி தனது கணவர் பன்டி வாலியாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு பன்டி வாலியா அளித்த பேட்டியில் சுமா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது,

சுமாவை நான் காதலித்து திருமணம் செய்தேன். அவர் மீது அதிமான அன்பும், பாசமும் வைத்திருந்தேன். இதனால் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தேன். ஆனால் அதைத் அவர் தவறாக பயன்படுத்தி எனது குடும்பத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் காரியத்தில் ஈடுபாட்டார்.

சுமா நல்லவள் போல நடித்து என்னை ஏமாற்றி விட்டாள். சுமாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தார். அப்போது அவருக்கும் சுமாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார் சுமா.

அவருடன் தினமும் ஜாலியாக சுற்றினர். இதை கண்டித்தேன். இதனால் தொடர்புகளை ரகசியமாக தொடர்ந்தார்.

இதற்கிடையில் சுமாவின் போன் எப்போதும் பிசியாக இருந்தது. யாருடனாவது பேசிக் கொண்டே இருந்தார்.

கேட்டால் பெற்றோருடன் பேசுவதாகக் கூறினார். அவரது டெலிபோன் பில் அதிமாக வந்தது. இதனால் சந்தேகம் வலுத்தது. பில்லை பார்த்த போது ஒருவரோடு 30 நாளில் 34 மணிநேரம் பேசியிருக்கிறார். எந்த அளவுக்கு அவர் மீது சுமாவுக்கு ஈடுபாடு இருந்தால் இப்படி பேசியிருப்பார்.

அவர் யார் எந்று விசாரித்தபோது, அவர் சுமா உடற் பயிற்சி செய்ய செல்லும் ஜிம் ஒன்றின் பயிற்சியாளர் என்பது தெரிய வந்தது. அவருடன் ஞாயிறுக்கிழமை தோறும் சுமா ஜாலியாக இருந்து வந்த திடுக்கிடும் தகவலும் தெரிய வந்தது.

இதைக் கேட்டு கண்டித்த போது கோபித்துக் கொண்டு தனது உடமைகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அதன் பின் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இப்போது ரூ.2 லட்சம் ஜீவனாம்சமும், மும்பை அருகே பாலி கில் பகுதியில் ஒரு வீடும், ஒரு காரும் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையெல்லாம் கொடுத்துவிட்டால் போன கெளரவத்தை அவர் திருப்பி தந்து விடுவாரா? சுமா பொய்களின் என்சைக்ளோபீடியா. என் குடும்பத்தினர் அவர் மீது வைத்திருந்த அளவிட முடியாத நம்பிக்கையை நாசமாக்கிவிட்டார்.

எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து தலைகுனிய வைத்துவிட்டார் என கூறியுள்ளார் பண்டி.

31 வயதான சுமாவுக்கும் பரபரப்புகளுக்கும் எப்போதுேம நெருங்கிய தொடர்பு தான்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil