»   »  என் கணவர் ஒரு சந்தேகப் பேர்வழி -சுமா

என் கணவர் ஒரு சந்தேகப் பேர்வழி -சுமா

Subscribe to Oneindia Tamil

எனக்கு ஜீவனாம்சம் தரவிட்டால் சும்மா விட மாட்டேன் என தனது கணவர் பண்டி வாலியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் நடிகை சுமா ரங்கநாத்.

தமிழில் சில படங்களில் நடித்துள்ள சுமா ரங்கநாத் அடுத்து இந்திக்கு தாவினர். அங்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடினர்.

ஏற்கனவே விவாகரத்தான இந்திப் பட தயாரிப்பாளர் பண்டி வாலியாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமீபத்தில் இருவரும் பிரிந்தனர்.

தனக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 2 லட்சம், மும்பை அருகே பாலி கில் பகுதியில் ஒரு வீடு, ஒரு கார் தர வேண்டும் என பண்டிக்கு நோட்டீஸ் அனுப்பினார் சுமா.

ஆனால், சுமாவுக்கும் உடற் பயிற்சியாளர் ஒருவருடனும், இன்னொரு நபருடனும் கள்ளத் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றம் சாட்டினர் பண்டி.

பண்டி வாலியாவின் குற்றச்சாட்டு குறித்து சுமாரங்கநாத் நிருபர்களிடம் கூறியதாவது,

பண்டி வாலியா ஒரு சந்தேகப் பேர் வழி. நண்பர்களை கூட சந்தேகிப்பவரிடம் எப்படி குடும்பம் நடத்த முடியும். இனி அவருடன் சேர்ந்து வாழ்வது என்பது இயலாத காரியம். அவர் மரியாதையாக ஜீவனாம்சம் கொடுத்தால் சும்மா இருப்பேன். இல்லையென்றால் அவரை சும்மா விட மாட்டேன். என்னை சித்தரவதை செய்தார் என்று போலீஸில் புகார் கொடுப்பேன் என்கிறார் சுமா ரங்கநாத்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil