»   »  சுமன் காட்டில் திடீர் மழை!

சுமன் காட்டில் திடீர் மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜியில் கலக்கல் வில்லனாக அசத்திய சுமனுக்கு வில்லனாக நடிக்க இந்தியிலிருந்து நிறைய வாய்ப்புகள் வந்துள்ளதாம்.

ஒரு காலத்தில் சாக்லேட் பாய் வேடங்களில் கலக்கிக் கொண்டிருந்தவர் சுமன். ரொமான்டிக் ஹீரோவாக தமிழ், தெலுங்கில் வலம் வந்து கொண்டிருந்த சுமன், 150க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரஜினியுடன் தீ படத்தில் அவரது தம்பியாக நடித்தார் சுமன். அதில் சுமனுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீபிரியா.

தெலுங்கைப் போலவே டிமாண்டுக்குரிய நாயகனாக தமிழிலும் தொடர்ந்து கொண்டிருந்த சுமனுக்கு தமிழில் பின்னர் வாய்ப்புகள் மங்கவே தெலுங்கிலேயே தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தார்.

வயதைத் தாண்டிய நிலையிலும் தொடர்ந்து ஹீரோவாக, ஆண்ட்டி ஹீரோவாக, ராமர், கிருஷ்ணராக என வித்தியாசமான ரோல்களில் நடித்துக் கொண்டிருந்த சுமனுக்கு, தமிழில் சிவாஜி மூலம் பெரும் பிரேக் கிடைத்துள்ளது.

காசிமேடு ஆதிகேசவன் என்ற கேரக்டரில் கலக்கலாக நடித்த சுமனைத் தேடி பல வில்லன் வாய்ப்புகள் வந்துள்ளனவாம். ஆனால் தமிழை விட இந்தியிலிருந்துதான் நிறைய வாய்ப்புகளாம்.

இதில் சில நல்ல கேரக்டர்களை மட்டும் ஏற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளாராம் சுமன். தெலுங்கில் என்னை ஹீரோவாகத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஆனால் வில்லனாக என்னை இன்னும் அங்கு பார்க்கவில்லை. இருந்தாலும் சிவாஜியில் எனது வில்லத்தனத்தை தெலுங்கு ரசிகர்களும் சிறப்பாகவே வரவேற்றுள்ளனர்.

என்னைப் பொருத்தவரை நான் ரஜினிக்கு தம்பியாக நடித்துள்ளேன். இப்போது அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளேன். 2வது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளேன். கடவுள் கேரக்டர்களிலும் நடித்துள்ளேன்.

எந்த ரோலாக இருந்தாலும், அந்த வேடத்துக்கு நாம் நியாயம் கற்பித்து விட்டால், திறமையைக் காட்டி நடித்தால் நிச்சயம் அது ஹிட்தான் என்கிறார் சுமன்.

விரைவில் சுமன் இந்தியிலும் புகுந்து விளாசுவார் என்று நம்பலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil