»   »  விஜய் வில்லன் ஆன சுமன்!

விஜய் வில்லன் ஆன சுமன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிக்கு வில்லனாக சிவாஜியில் துவம்சம் செய்த சுமன், இப்போது விஜய்க்கு வில்லனாகியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்களில் ஹீரோவாக நடித்தவர் சுமன். தமிழிலும் நிறையப் படங்களில் சிங்கிள் ஹீரோவாகவும், செகண்ட் ஹீரோவாகம் நடித்தவர்.

இடையில் தமிழ் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தவரை தனது சிவாஜி படத்தில் வில்லனாக்கினார் ரஜினிகாந்த். சிவாஜியில் காசிமேடு ஆதிகேசவன் என்ற கலக்கல் வில்லனாக நடித்துக் கலக்கிய சுமனுக்கு இப்போது நிறையப் படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.

குறிப்பாக இந்தியில்தான் நிறையப் படங்கள் வந்துள்ளதாம். வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் வருவதால் அப்செட் ஆகி விடவில்லையாம் ஹீரோ சுமன்.

இதுவரை ஹீரோவாக கலக்கி விட்டோம், இனிமேல் வில்லனாக விளையாடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் சுமன். இருந்தாலும் சிவாஜி மூலம் கிடைத்த இமேஜை கெடுத்து விடும் வகையிலான படங்களைத் தவிர்க்கும் வகையில் தனது கேரக்டருக்கு கெளவரம் தரும் வகையிலான படங்களையே தேர்வு செய்து நடிக்கப் போகிறாராம்.

தமிழில் விஜய் நடிக்க, தரணி இயக்க, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் சுமன் புக் ஆகியுள்ளார். சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்தவர், இப்போது இளைய தளபதிக்கும் வில்லனாகியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் உஷார்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil