»   »  சன் டிவிக்கு கந்தசாமி!

சன் டிவிக்கு கந்தசாமி!

Subscribe to Oneindia Tamil


சீயான் விக்ரம், ஷ்ரியா ஜோடியில், கலைப்புலி தாணு தயாரிப்பில், சுசி.கணேசனின் இயக்கத்தில் உருவாகி வரும் கந்தசாமி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாம்.

Click here for more images

சன் டிவிக்கும், கலைப்புலி தாணுவுக்கும் இடையில் சுமூக உறவு இல்லை. இதனால் கலைப்புலி தாணுவின் படங்ளை முற்றிலும் புறக்கணித்து வந்தது சன் டிவி.

தாணு மதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் திமுக ஆதரவுடன் இயங்கிக் கொண்டிருந்த சன் டிவி அவ்வாறு நடந்து கொண்டது. இப்போதுதான் சன் டிவியை விட்டு திமுக விலகி விட்டதே. இதனால் சன்னும், தாணுவும் நட்புக் கரம் நீட்டி மறுபடியும் சுமூகமாகி விட்டனர்.

சமீபத்தில், கந்தசாமி படத்தின் தொடக்க விழாவை சன் டிவி நேரடியாக ஒளிபரப்பியது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு வழங்கியுள்ளார் கலைப்புலி தாணு.

இதுதவிர 2008ம் ஆண்டு இறுதி வரை தான் எடுக்கும் அனைத்துப் படங்களின் உரிமையையும் கூட சன் டிவிக்கு வழங்கியுள்ளாராம் கலைப்புலி தாணு. இதுதொடர்பான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து தாணுவிடம் கேட்டபோது, விரிவாக பேச மறுத்து விட்டார். மாறாக, கோலிவுட்டில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை, தொழில் மீதான நிரந்தர பாசம் மட்டுமே இருக்கிறது என்றார் அர்த்தப்பூர்வமான வார்த்தைகளில்.

Read more about: kandasamy, shriya, statelite rights, vikram
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil