For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  பிதாமகன் படம் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்த சன் டிவிக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாகஇயக்குனர் பாலா கூறியுள்ளார்.

  அவரது பேட்டி:

  பிதாமகன் குறித்து முதல் வாரத்தில் ஆஹா, ஓஹோவென புகழ்ந்து சன் டிவி விமர்சனம் செய்தது.தயாரிப்பாளாரையும் வினியோகஸ்தர்களையும் கவர்வதற்காகவே இவ்வாறு செய்திருக்கிறார்கள்.

  இதன் பின்னர் அவர்களை அழைத்து படத்தை சன் டிவியில் ஒளிபரப்புவதற்காக அடி மாட்டு விலைக்குக்கேட்டிருக்கிறார்கள். அந்த வியாபாரம் என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்ஸை

  ஆநால், அடுத்த வாரம் முதல் பிதாமகனை மிகவும் தரக்குறைவாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டது சன் டிவி. இந்தப்படத்தைப் பார்த்து குழந்தைகள் பயப்படுகிறார்கள், பெண்கள் எழுந்து ஓடுகிறார்கள், படப் பெட்டிகள் திரும்பிவந்துவிட்டன என வாய்க்கு வந்தபடி விமர்ச்சித்தார்கள்.

  அதைக் கண்டித்து நான் பத்திரிக்கைகளைச் சந்தித்துப் பேச முயன்றபோது, என்னை சன் டிவி நிர்வாகம் தொடர்புகொண்டது. அடுத்த வாரம் பாருங்கள், இதுபோல விமர்சிக்க மாட்டோம் என்று உறுதிமொழி தந்தார்கள். நானும்பொறுத்துக் கொண்டேன்.

  ஆனால், அடுத்த வாரம் பிதாமகனை முதலிடத்தில் இருந்து வேண்டுமென்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்கள்.முதல் வாரம் நன்றாக இருப்பதாக விமர்சித்தவர்கள் அடுத்து அதைக் கேவலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

  இரவு, பகலாக காட்டிலும் மேட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் உழைத்து, மிகுந்த கஷ்டப்பட்டு இந்தப் படத்தைஉருவாக்கினோம். சினிமாவையே பிரதானமாக வைத்துத் தான் சன் டிவியே செயல்படுகிறது.

  படம் எல்லா இடங்களிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நியாயமே இல்லாமல்படத்தை தரக் குறைவாக விமர்சிப்பதை ஏற்க முடியாது. இதற்காக சன் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும்.

  இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவேன். முதலில் மதுரையில் போராட்டம் நடத்துவேன். என் தலையில் ஒருகுட்டு குட்டினால் நான் இரண்டு குட்டு குட்டுவேன். சட்டரீதியிலும் சன் டிவி மீது நடவடிக்கை எடுப்பேன்.திரையுலகினர் எனக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

  இந் நிலையில் பிதாமகனை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு குறைந்தது 10 முதல் 20 சதவீதகம் வரை லாபம்கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. படத்தை வாங்கி நஷ்டப்பட்டது யாரும் இல்லை என்கிறது பாலா தரப்பு.

  படம் வெளியான நாள் முதல் பாலாவின் அலுவலகத்தில் ஒரே திருவிழாக் கூட்டமாக உள்ளது. அவரை நேரில்சந்தித்து வாழ்த்திவிட்டுப் போக நெடு நேரம் பலரும் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

  படத்தின் வெற்றியையடுத்து இதன் தெலுங்கு உரிமையை வாங்க தெலுக்குப் பட உலகில் போட்டா போட்டிஏற்பட்டுள்ளது. இதை வாங்கிவிட தீவிரமாக முயன்று வருகிறார் இது தாண்ட போலீஸ் ராஜசேகர்.

  அதே நேரத்தில் பிதாமகன் தொடர்பாக சம்பளப் பிரச்சனை வெடித்துள்ளது. விக்ரம், சூர்யா ஆகியோருக்குசம்பளம் லட்சக்கணக்கில் பாக்கியாம். இதை நடிகர் சங்கத்துக்கே எடுத்துச் சென்றுவிட்டார் விக்ரம். சூர்யாவோஅமைதி காக்கிறார்.

  விக்ரமே கூட இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பணம் போட்டதாக சொல்கிறார்கள். அந்தப் பணம்வந்துவிட்டது. ஆனால், சம்பளத்தில் தான் கையை வைத்துவிட்டாராம் தயாரிப்பாளர்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X