»   »  சுந்தர்.சியும், ஆம்பூர் ராகினியும்!

சுந்தர்.சியும், ஆம்பூர் ராகினியும்!

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்து அட்டகாசம் செய்து வரும் சுந்தர்.சியுடன், மலேசியாவிலிருந்து வந்து குதித்துள்ள அழகு மாடல் ராகினி இரு படங்களில் ஜோடி போடுகிறார். இந்த அழகு பிரியாணிக்கு பூர்வீகம் ஆம்பூராம்.

இயக்குநராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சுந்தர்.சி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் அருணாச்சலம் படத்தில் இயக்கி சாதனை படைத்தவர்.

காமெடிக்கு சுந்தர்.சி. என்ற பெயரைப் பெற்ற சுந்தர்.சி, தலைநகரம் படம் மூலம் ஹீரோவாக மாறினார். அன்று மாறியது அவரது திரையுலக தலையெழுத்து.

இயக்குநராக மட்டுமே பார்க்கப்பட்ட சுந்தர்.சியை ரசிகர்கள் ஹீரோவாகம் ரசித்துப் பார்த்ததால், அடுத்தடுத்து ஹீரோவாக கலக்க ஆரம்பித்துள்ளார் சுந்தர்.சி.

சுந்தர்.சி. நடித்து சமீபத்தில் வெளியான வீராப்பு ஹிட் ஆகியுள்ளதால் சுந்தர்.சி படு சந்தோஷமாக உள்ளார். இந்த நிலையில் சுந்தர்.சி. அடுத்து நடித்து வரும் தீ படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்துள்ளார்.

ஸ்ரீமூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தீ படத்தில், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் சுந்தர்.சி. இதில் அவருக்கு ஜோடி போடுபவர் ராகினி. மலேசிய மாடலான இவருக்கு பூர்வீகம் நம்ம ஆம்பூர்தான்.

படு அழகாக இருக்கும் ராகினியின் பெயர் ரம்யா. சினிமாவுக்காக ராகினியாக மாறியுள்ளார். தித்திக்கும் அழகுடன் உள்ள ராகினிக்கு தமிழ் சினிமா என்றால் ரொம்ப இஷ்டமாம். அதனால் தீ பட வாய்ப்பு வந்தபோது தட்டாமல் ஏற்றுக் கொண்டாராம்.

கவர்ச்சி காட்டுவீர்களா என்று ராகினியிடம் கேட்டால், ஏன் காட்ட மாட்டேன். கதைக்குத் தேவை என்றால் முரண்டு பிடிக்க மாட்டேன், கட்டாயம் காட்டுவேன் என்று கூறி மனசில் பீர் வார்த்தார்.

தீ படம் தவிர ஷக்தி சிதம்பரத்தின் தயாரிப்பில் உருவாகும் பொறுக்கி படத்திலும் புக் ஆகி விட்டாராம் ராகினி. இந்த இரு படங்களும் வெளியானால் ராகினிக்கு கோலிவுட்டில் ரெட் கார்பெட் விரிக்கப்படுவது உறுதி என்கிறார்கள் அவரின் திறமை புரிந்தவர்கள்.

இதற்கிடையே, வீராப்பு ஹிட் பட வரிசையில் சேர்ந்துள்ளதால் சுந்தர்.சிக்கு டிமாண்ட் எகிறியுள்ளது. இப்போதைக்கு கோலிவுட்டில் படு பிசியான ஹீரோ சுந்தர்.சி.தான்.

மலையாளத்தில் வெளியான ஸ்படிகம் படத்தின் ரீமேக்தான் வீராப்பு. இப்படம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் சுந்தர்.சியைத் தேடி ஓடி வர ஆரம்பித்துள்ளனர்.

சிலர் கோடி ரூபாய் வரை சம்பளம் தர தயாராக உள்ளனராம். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு படு டைட்டாக உள்ளாராம் சுந்தர்.சி.

கடந்த 15 ஆண்டுகளாக இயக்குநராகவே இருந்து விட்ட சுந்தர்.சி.க்கு, புதிதாக கிடைத்துள்ள இந்த ஹீரோ அதிர்ஷ்டம் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

தலைநகரம் வெற்றிப் படமான போது அடுத்த படத்தில் நடிக்க சுந்தர்.சி. அவசரப்படவில்லை. மாறாக, மாதவன், ரீமா சென்னை வைத்து ரெண்டு படத்தை இயக்கினார்.

அப்போதுதான் சுந்தர்.சியின் மனைவியான குஷ்பு, அடுத்தடுத்து நடிக்க வேண்டும், இயக்கம் வேண்டாம் என்று வற்புறுத்தி, சுந்தர்.சியை நடிப்புப் பக்கம் தீவிரமாக திருப்பி விட்டார்.

இதையடுத்து டைரக்ஷனை விட்டு விட்டு தீவிரமாக நடிப்புப் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் சுந்தர்.சி. அவரது கைவசம் தற்போது 8 படங்கள் உள்ளதாம். தீ, பெருமாள், ஆயுதம் செய்வோம், வீராப்பு, இயக்குநர் பத்ரியின் அடுத்த படம் என இந்த லிஸ்ட் நீளுகிறது.

இதுதவிர சுந்தர்.சியை வைத்து குஷ்புவும் இரு படங்களைத் தயாரிக்கவுள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் படம் ஒன்றிலும் அடுத்த ஆண்டு நடிக்கவுள்ளாராம் சுந்தர்.சி. இப்போதைய நிலையைப் பார்த்தால் 2009ம் ஆண்டில்தான் சுந்தர்.சி. ஃப்ரீ ஆவார் என்று தெரிகிறது.

இதுகுறித்து சுந்தர்.சியிடம் கேட்டபோது, ஒவ்வொரு இயக்குநருக்குள்ளும் ஒரு நடிகன் ஒளிந்திருப்பான். எனது விஷயத்தில் நான் நடிகன் ஆனது முற்றிலும் ஒரு விபத்துதான். நான் திட்டமிட்டு நடிக்க வரவில்லை.

நான் கடந்த காலங்களில் இயக்கிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னை ஹீரோவாகப் போட்டு படம் எடுக்க விரும்புகின்றனர். ஆனாலும் நான் நல்ல கதைகளாகப் பார்த்துத்தான் படங்களை முடிவு செய்கிறேன்.

நடிப்பில் நான் பிசியாகி விட்டதால் என்னால் படங்களை இயக்குவது இயலாததாக மாறியுள்ளது. 2009ம் ஆண்டில் எனது மனைவியின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளேன் என்கிறார் சுந்தர்.சி.

அசத்துங்கப்பு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil