»   »  சன்னுக்கு வந்த புது சோதனை

சன்னுக்கு வந்த புது சோதனை

Subscribe to Oneindia Tamil

நடிகை கெளதமி தொகுத்து வழங்கும் அன்புடன் நிகழ்ச்சிக்கு போதிய விளம்பரதாரர் ஆதரவு இல்லாததால், அந்த நிகழ்ச்சியையே சன் டிவி நிறுத்தி விட்டது.

s15வது ஆண்டில் காலெடுத்து வைத்த நேரம் சரியில்லையோ என்னவோ சன் டிவிக்கு அடுத்தடுத்து பல சோதனைகள் ரெக்கை கட்டிப் பறந்து வந்து பல்லாங்குழி ஆடிக் கொண்டுள்ளன.

15வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சில வாரங்களிலேயே மதுரையில் உள்ள சன் டிவி, தினகரன் அலுவலகங்கள் திமுகவினராலேயே அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்தார். பங்குச் சந்தையில் சன் டிவியின் மதிப்பு கிடுகிடுவென குறைந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் சன் டிவி நிகழ்ச்சிகளுக்கும் ஏழரை பிடிக்க ஆரம்பித்துள்ளது. விஜய் டிவிக்குப் போட்டியாக சில மாதங்களுக்கு முன்பு சில நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது சன் டிவி.

அதில் ஒன்றுதான் அன்புடன். நடிகை கெளதமி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு ஒளிபரப்பாகி வந்தது. விஜய் டிவியில் வரும் காபி வித் அனு நிகழ்ச்சிக்குப் போட்டியாகத்தான் இந்த நிகழ்ச்சியை சன் டிவி ஆரம்பித்தது.

ஆனால் நடிகை அனு தொகுத்து வழங்கி வரும் காபி வித் அனுவுக்குக் கிடைத்துள்ள அபார வரவேற்பு, அனுவின் அட்டகாச நிகழ்ச்சிக்கு முன்பு அன்புடன் எடுபடவில்லை.

கெளதமியின் சோர்ந்து போன குரல், சொதப்பலான பிரசன்டேஷன் ஆகியவற்றால் அந்த நிகழ்ச்சிக்கு சுத்தமாக ஆதரவே இல்லை. மேலும் ஸ்பான்சர்களும் சரியாக கிடைக்கவில்லை. முன்பு திமுக ஆதரவுடன் இருந்ததால், ஸ்பான்சர்களை பிடிக்க அதிக சிரமம் இருக்கவில்லை.

ஆனால் இப்போது திமுகவுக்கும், சன்னுக்கும் தொடர்பு அற்றுப் போய் விட்டதால் இருந்த சில ஸ்பான்சர்களும் விலகிப் போய் விட்டார்களாம். இதனால் அன்புடன் நிகழ்ச்சியை நிறுத்தி விட சன் டிவி நிர்வாகம் முடிவு செய்ததாம்.

இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு ஒளிபரப்பாக வேண்டிய அன்புடன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவில்லை.

பாபா படத்தில் ரஜினி சொல்வதைப் போல சன் டிவிக்கும் கவுண்ட் டவுண் ஆரம்பிச்சிருச்சோ?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil