twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாகும் தமிழ் 'ராப்' !

    By Sudha
    |

    திரைப்படப் பாடல்கள் அளவுக்கு தனி இசை ஆல்பங்கள் வெற்றி பெறாது என்பது பொதுவாக ரசிகர்கள் மத்தியில் உள்ள அபிப்பிராயம். சில நேரங்களில் இது பொய்த்துவிடுவதும் உண்டு.

    சினிமாப் பாடல்கள் இருக்கும் போது கவிதைகள் வராமலா இருக்கின்றன?

    ஆல்பம் என்பது முற்றிலும் வேறானது. அதற்கென தனி பரிமாணம் உள்ளது. தனி இயல்பு உள்ளது. அதன்படி உருவாக்கப்படும் ஆல்பங்கள் எந்த மொழியாக இருந்தாலும் வெற்றி பெறும்.

    அதனால் தான் சுரேஷ் தா வன் ஆல்பம் உலகில் பெரிதும் பேசப்படுகிறார்.

    இலங்கையில் பிறந்து சென்னையில் வளர்ந்த இவர் பிறகு குடும்பச் சூழலால் நெதர்லாந்து போனார். நெதர்லந்து நாடு முழுக்க தமிழ் 'ராப்பராக'ப் பிரபலமாகிவிட்ட இந்த 23 வயது இளைஞர் தனக்கென தனிரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

    ஐரோப்பிய நாடுகளில் முதல் தமிழ் ராப்பர் என்னும் பெருமைக்குரிய இவரது 'வல்லவன்' தமிழ் ராப் ஆல்பம் 2003 -2004 ஆண்டுகளில் சக்கைப்போடு போட்டது. ஏற்கனவே 'மாமா பொண்ணு' , 'சிங்கம்' தமிழ் ராப் ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். இப்போது 'தலைவா' என்கிற பிரமாண்ட வீடியோ ஆல்பத்தைக் கொண்டுவந்துள்ளார்.

    இந்த ஆல்பம் 15 ட்ராக் தொழில் நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச நட்சத்திரங்கள் ஆடிப்பாடி நடித்துள்ளனர். இதில் உள்ள 'மூவ் ய பாடி' என்கிற பாடல்தான் ஹைலைட் என்கிறார் சுரேஷ். இதன் நிர்வாகத் தயாரிப்பு, பாடல்கள் இணை இசை சுரேஷ் தா வன். இயக்கம் - டிம் ஸ்வார்கர், இசை - தா வன் - ஸ்டீவ் க்ளிஃப், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு -ஆர்ட்டியாம், தயாரிப்பு - எஸ்டிஓ ரெக்கார்ட்ஸ்.

    தமிழ் ராப் இசையை உலகம் முழுக்க பரப்பும் நோக்கல் 'Tamil Rap Around the world' என் கிற புதுவகையான கலவை முயற்சியையும் செய்து வருகிறார் சுரேஷ் தா வன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X