»   »  சுரேஷ்கிருஷ்ணாவின் அடுத்த டார்கெட்!

சுரேஷ்கிருஷ்ணாவின் அடுத்த டார்கெட்!

Subscribe to Oneindia Tamil

பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்ற மாபெரும் தோல்விப் படத்தைக் கொடுத்த தனுஷ் மார்க்கெட்டை ஒரு தினுசாக மாற்றிய சுரேஷ் கிருஷ்ணா அடுத்து சிபியை ஒரு கை பார்க்கப் போகிறாராம்.

வீரா, அண்ணாமலை என ரஜினிக்கு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. அதே ரஜினியை வைத்துத்தான் பாபா என்ற மறக்க முடியாத படத்தையும் கொடுத்தார் சுரேஷ் கிருஷ்ணா.

கமல்ஹாசனை வைத்து சத்யா, இந்திரன் சந்திரன், ஆளவந்தன் என வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவரான சுரேஷ் கிருஷ்ணா சமீப காலமாக தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வருகிறார். சுரேஷ் கிருஷ்ணாவின் சமீபத்திய சூப்பர் டூப்பர் தோல்விப்படம் பரட்டை என்கிற அழகுசுந்தரம்.

இந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் புரியவில்லை. அந்த வேகத்தில் படம் இருந்ததால் தனுஷுக்கு, மறக்கப்பட வேண்டிய படப் பட்டியலில் பரட்டை சேர்ந்து விட்டது.

இந்த நிலையில், அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் சுரேஷ் கிருஷ்ணா. சிபிராஜிடம் கதை ஒன்றை சொல்லியுள்ளார். அவரும் கேட்டு திருப்தி தெரிவித்துள்ளாராம். விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

லீ படத்திற்குப் பின்னர் பல கதைகளைக் கேட்டும் எதிலும் திருப்தி வரவில்லையாம் சிபிக்கு. இந்த நிலையில்தான் சுரேஷ் கிருஷ்ணாவின் கதை அவரைக் கவர்ந்துள்ளதாம். இப்படத்திலும் ஆக்ஷன் ஹீரோவாகவே நடிக்கிறாரா அல்லது வித்தியாசமான வேடம் பூணுகிறாரா என்று தெரியவில்லை.

சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ்கிருஷ்ணா. எனவே சிபிக்கும் அவர் சிறப்பான வெற்றிப் படத்தைக் கொடுப்பார் என நம்பலாம்.

முன்னதாக கரணிடம் இந்தக் கதையை சொன்னாராம் கிருஷ்ணா. அவர் கும்பிடு போடவே சிபியைப் பிடித்தாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil