»   »  சுரேஷ் கோபி படத்துக்கு தடை

சுரேஷ் கோபி படத்துக்கு தடை

Subscribe to Oneindia Tamil

சுரேஷ் கோபி நடித்துள்ள பிளாக் கேட் படத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வினயன் இயக்கத்தில், சுரேஷ் கோபி நடித்துள்ள படம் பிளாக் கேட். இதில் இவருக்கு ஜோடி கார்த்திகா. வருகிற ஓணம் பண்டிகையன்று ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே நிதிப் பிரச்சினையால் இந்தப் படம் தள்ளாடித் தள்ளாடி வளர்ந்து வந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர்களான குட்வே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தினர், உல்லத்தில் மீடியா பீப்பிள் நிறுவனத்துக்கு ரூ. 75 லட்சம் பாக்கி வைத்திருந்தனர்.

இந்தத் தொகையைத் தராமல் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று கோரி தற்போது உல்லத்தில் அமைப்பின் சசிதரன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், படத்தை மறு உத்தரவு வரும் வரை ரிலீஸ் செய்ய இடைக்காலத் தடை விதித்தார். எனவே இந்த ஓணத்திற்கு சுரேஷ் கோபி படம் வரும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் படம் கைவிட்டு விட்டதால், தான் நடித்துள்ள கிச்சாமணி எம்.பி.ஏ. படத்தை அதிகம் நம்பியுள்ளார் சுரேஷ் கோபி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil