»   »  ரஜினி நம்பர் ஒன் - திரிஷாவும்!

ரஜினி நம்பர் ஒன் - திரிஷாவும்!

Subscribe to Oneindia Tamil

தமிழ் நடிகர்களிலேயே மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகராக ரஜினிகாந்த் விளங்குவதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் சார்பில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பில் தற்போது திரையுலகில் உள்ள கலைஞர்களில் யாருக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதன் முடிவுகளை லயோலா வெளியிட்டுள்ளது.

sநடிகர்களில் ரஜினிகாந்த்துக்குத்தான் மக்களிடையே அதிக செல்வாக்கு உள்ளது. ரஜினிதான் பிடிக்கும் என 23.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 2வது இடம் இளைய தளபதி விஜய்க்கு கிடைத்துள்ளது. விஜய்க்கு 12 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.

3வது இடத்தில் கேப்டன் விஜயகாந்த் உள்ளார். அவருக்கு 10.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 4வது இடம் கலைஞானி கமல்ஹாசனுக்கு. 8.5 சதவீதம் பேர் கமல் பிடிக்கும் என்றும், 6.1 சதவீதம் பேர் தல அஜீத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகைகளைப் பொறுத்தவரை தென்னிந்திய அழகு தேவதை திரிஷாவுக்கே முதலிடம். 18.5 சதவீதம் பேர் திரிஷாதான் தங்களுக்குப் பிடிக்கும் என கருத்து ஜொள்ளியுள்ளனர். இரண்டாவது இடம் மிஸஸ் சூர்யாவுக்கு, அதாவது ஜோதிகாவுக்கு. 16.8 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது இந்த திருமதிக்கு.

3வது இடத்தில் ஆசினும் (15.1சதவீதம்), நான்காவது இடத்தில் சின்னப் புன்னகை சினேகாவும் (11.9), அடுத்த இடத்தில் உடுக்கை இடுப்பழகி பிரியா மணியும் (8.2) உள்ளனர்.

காமெடி நடிகர்களில் வடிவேலுவுக்குத்தான் அமோக ஆதரவு. 31.4 சதவீதம் பேரின் ஆதரவுடன் அமோகமாக உள்ளார் வடிவேலு. அடுத்த இடம் விவேக்குக்கு. அவருக்கு ஆதரவாக கருத்து சொன்னவர்கள் 20.1 சதவீதம் பேர்.

வில்லாதி வில்லன் பிரகாஷ்ராஜ்தான், வில்லன் நடிகர்களிலையே நம்பர் ஒன் நடிகராக உள்ளார். அவருக்கு 41.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil