»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குறித்த கணக்கெடுப்பு மிகவும் ரகசியமான முறையில் நடந்துவருகிறது.

ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அரசியலில்குதிக்கலாம் என்ற நிலையில் இந்தக் கணக்கெடுப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மாநில உளவுப் பிரிவு போலீசார் இந்த சர்வேயை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் நடத்தப்படும்இரண்டாவது சர்வே இது.

குறிப்பாக ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகிய நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குறித்து மிக சீரியஸான கணக்கெடுப்புநடந்து வருகிறது.

ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை, ரசிகர்களின் எண்ணிக்கை, மன்ற நிர்வாகிகளின் எண்ணிக்கை, இவர்களதுகுடும்பப் பின்னணி, அவர்களது படிப்பு, அவர்கள் செய்து வரும் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டம் உள்படஏராளமான விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ரஜினி, விஜயகாந்த் ஆகியோரின் சமீபத்திய பல படங்களிலும் அரசியல் வாடை அடித்தது அனைவருக்குமேதெரிந்த ஒன்று தான். "நம் தலைவனின் அரசியல் அறிவிப்பு எப்போதடா வரும்?" என்று அவர்களுடையரசிகர்களும் வெகு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தங்களையும் அரசியலுக்காகத் தயார்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

ரஜினி, விஜயகாந்த் தவிர கமலஹாசன், சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், விஜய், அஜீத், பிரசாந்த் ஆகியோரின் ரசிகர்மன்றங்கள் குறித்தும் சர்வே நடந்து வருகிறது. இவர்களில் விஜய், அஜித் மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கு சமீபகாலத்தில் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது.

கடந்த 1995க்குப் பின்னர் ரஜினி ரசிகர் மன்றங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும், பலமன்றங்களில் உறுப்பினர் சேர்க்கையே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. ரஜினி படங்கள் நீண்டஇடைவெளிக்கு ஒருமுறை மட்டுமே வருவதால், அவருடைய ரசிகர்கள் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும்பணியில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

விஜய்காந்துக்கு கிராமப் பகுதிகளில் ஏராளமான மன்றங்கள் இருப்பதும், மொத்தத்தில் எல்லா நடிகர்களுக்கும்மதுரை மாவட்டத்தில் அதிக மன்றங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதில் கார்த்திக், பிரபு போன்றவர்களுக்கு ஜாதிரீதியிலான மன்றங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil