»   »  வில் Vs

வில் Vs

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்.ஜே.சூர்யாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே டைட்டில் கிளாஷ் ஏற்பட்டுள்ளதாம்.

சிவக்குமாரின் புதல்வன் சூர்யாவும், இயக்குநராக இருந்து நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையே ஏற்கனவே பெயர்க் குழப்பம் இருந்து வந்தது.

சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் இடையே காதல் உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியானபோது, எந்த சூர்யாவை ஜோதிகா காதலிக்கிறார் என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அது நடிகர் சூர்யா என்று தெளிவானது.

பெயர்க் குழப்பம் நீங்கிய நிலையில் இப்போது பட டைட்டில் தொடர்பாக இருவருக்கும் இடையே உரசல் உருவாகியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ஹரியின் இயக்கத்தில் வில் என்ற படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். அப்படத்துக்கு வேல் என பெயரிட்டுள்ளனராம்.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்க, பிரபாகரன் படத்தை இயக்கவுள்ளார். வில், வேல் இடைய நிறைய அர்த்த வித்தியாசம் இருந்தாலும் உச்சரிப்பில் இரண்டுக்கும் அதிக வித்தியாசம் தெரியாது. இதனால் இரு தரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

குழப்பத்தை போக்க டைட்டிலை மாற்றுவீங்களா என்று எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டபோது, சான்ஸே இல்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil