»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஐ புரோ பென்சிலால் கோடு போட்ட மாதிரி அந்த கால ஜெமினி மீசை, விளக்கெண்ணை பூசி படிய வாரி சுருட்டிவிட்ட முடி, கண் மை பூசிய புருவம், கைகளில் பச்சை குத்தப்பட்ட பாம்பு உருவங்கள், உருட்டும் விழிகள்...

பார்க்க, அச்சு அசலாக மேஜிக் மன்னன் பி.சி.சர்க்கார் மாதிரி இருக்கிறார் சூர்யா.

பார்த்தாலே சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. நம் சிரிப்பைப் பார்த்தும் சூர்யாவும் அடக்க முடியாமல்சிரிக்கிறார்.

என்னங்க இது? என்றால், நான் தான் மாயாவி என்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் உதவியுடன், இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மாயாவி படத்தில்சூர்யாவின் கெட்-அப் தான் இது. படத்தை இயக்கும் டைரக்டர் சிங்கம்புலி, பாலாவைப் போலவே மகா காமெடிசென்ஸ் உள்ளவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், சூர்யாவை அவர் ஆக்கி வைத்திருக்கும் கோலத்தைப் பார்த்தால் மனிதர் அநியாய ரகளை ஆசாமியாய்இருப்பார் போலிருக்கிறது.

படத்தின் ஹீரோவான சூர்யாவுக்கும் ரகளையான வேஷம் தான். திடீர் திடீர் என படத்தில் ஹீரோ காணாமல்போய்விடுவாராம்.. அது தான் பெயர் மாயாவி.

ஹீரோயினாக நடிப்பது சூர்யாவுக்கே ரொம்பப் பிடித்த ஜோதிகா தான். படத்தின் ஸ்டில் செஷனை முடித்தகையோடு சூட்டிங்கையும் தொடங்கிவிட்டது யூனிட். இதில் சூர்யாவின் சம்பளத்தை ரூ. 1 கோடிக்குக் கொண்டுபோய் விட்டிருக்கிறார் பாலா.

இதுவரை யாரிடமும் பேரம் பேசாமல் சம்பளம் வாங்கி வருபவர் சூர்யா. சிம்புவே ரூ. 2 கோடி வாங்கும் நிலையில்சூர்யா அடக்கியே வாசித்து வருகிறார். பாலாவிடமும் இந்தப் படத்துக்கு சூர்யா சம்பளம் என்று எதுவும்பேசவில்லை.

ஆனால், பாலா கொடுத்த செக் ரூ. 1 கோடிக்கு இருக்க சூர்யா அதிர்ச்சியாகி, எதுக்கு இவ்ளோ என்று கேட்க,உனக்குத் தரலாம் டா என்று உரிமையோடு சொல்லிய பாலா, தாணு தான் உனக்கு எவ்ளோ வேணும்னாலும்தரலாம்னு சொன்னார் என்றாராம்.

படத் தயாரிப்பின் நிர்வாகப் பணிகளை தாணுவே கவனிக்கிறார். பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பாலாவிடம்இருந்து படத்தை பின்னர் வாங்கிக் கொள்வார் தாணு.

சென்னையில் ஒரு மழைக்காலம் டிராப் ஆனதையடுத்து கவலையில் இருந்த சூர்யாவை வைத்து அடுத்த படத்தைஜோதிகாவே தயாரிக்க முன் வந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், சிம்பு நடிக்கும் தொட்டி ஜெயா படத்தில் பணத்தை முடக்கியிருந்தாலும் சூர்யாவுக்காகவும்பாலாவுக்காகவும் படத்தைத் தயாரிக்க தாணுவே முன் வந்தாராம். அவர் தான் பாலாவைக் கூப்பிட்டு பிஸ்டுடியோவையும் ஆரம்பிக்க வைத்து இந்தப் படத்தை எடுக்க வைத்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவு பாலா ஆஸ்தான சினிமாட்டோகிராபரான ரத்னவேலு தான் கவனிக்கிறார்.

சினிமாவின் கஷ்டங்களை நன்றாக உணர்ந்தவர் என்பதாலோ என்னவோ, இந்தப் படத்தில் பணிபுரியும்அனைவருக்குமே நல்ல ஊதியம் பேசியிருக்கிறார் பாலா. ஆந்திராவில் பிரபலமான தேவி பிரசாத்இசையமைக்கிறார். எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.

மகா காமெடிப் படமாக உருவாகும் மாயாவியை 3 மாதத்தில் முடித்து, காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ்செய்ய திட்டமிட்டிருக்கிறார் பாலா.

இந்தப் படம் சூர்யாவுக்கு மற்றொரு மைல் கல்லாகஅமையும் என்று சொல்லும் பாலா, படத்தை நான்இயக்காவிட்டாலும் இது எனது படமாகவே இருக்கும்என்கிறார்.

பாலாவுக்கு நன்றிக் கடன் செலுத்த, அவர் தயாரிக்கும் முதல் படமான இதில் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடிக்கஆசைப்படுகிறாராம் விக்ரம். பாலா ஒப்புக் கொண்டால், மாயாவியில் அவரும் தலைகாட்ட வாய்ப்பிருக்கிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil