»   »  தொடர்ந்து முதலிடத்தில் 'வேல்'!

தொடர்ந்து முதலிடத்தில் 'வேல்'!

Subscribe to Oneindia Tamil
Asin
தீபாவளிக்கு வெளியான வேல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாலாஜி சக்திவேலின் கல்லூரி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தங்கரின் ஒன்பது ரூபாய் நோட்டு 3வது இடத்தில் உள்ளது.

தீபாவளி ரிலீஸுக்குப் பின்னர் மேலும் சில படங்கள் திரைக்கு வந்துள்ளன. இருப்பினும் சூர்யா, ஆசின் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன வேல் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்திலேயே தொடர்ந்து நீடிக்கிறது.

படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்களும் கிட்டத்தட்ட, போட்ட முதலை எடுத்து விட்டனராம்.

2வது இடத்தில் சமீபத்தில் வெளியான கல்லூரி உள்ளது. படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாலும், வித்தியாசமான கதை, வித்தியாசமான நடிகர்களின் நடிப்பாலும் கல்லூரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. போகப் போக இது கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த பொல்லாதவன் கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழக்க ஆரம்பித்துள்ளது.


தீபாவளிக்குப் பிந்தைய கோலிவுட்டின் டாப் 5 படங்கள்:

1. வேல் - இயக்கம் ஹரி. இவருக்கு இது தொடர்ச்சியான 8வது ஹிட் படம். சூர்யா, ஆசின் அசத்தல் நடிப்பாலும், வடிவேலுவின் அரட்டல் காமெடியாலும் படம் தொடர்ந்து முதலிட்டில் உள்ளது.

2. கல்லூரி - இயக்கம் பாலாஜி சக்திவேல். முதல் படமான காதல் அளவுக்கு இல்லை என்றாலும் கூட நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது பாலாஜியின் கல்லூரிக்கு. கல்லூரிக் கால நினைவுகளை கிளறி விடும் வகையில் படத்ைதக் கொடுத்துள்ளார் பாலாஜி.

சென்னை அபிராமி மெகாமாலில், வியாழக்கிழமையன்று இந்தப் படத்திற்கான 90 சதவீத டிக்கெட்டுகள் விற்றுள்ளதாம். இதை சாதனை என்கிறார்கள்.

3. ஒன்பது ரூபாய் நோட்டு - இயக்கம் தங்கர் பச்சான். தரமான படமான தங்கரின் ஒன்பது ரூபாய் நோட்டுக்கு லேட் பிக்கப் கிடைத்துள்ளது. சத்யராஜ், நாசர், ரோகினி, அர்ச்சனா ஆகியோரின் பண்பட்ட நடிப்புக்கும், வைரமுத்துவின் எதார்த்த வரிகள், பரத்வாஜின் இயல்பான இசையில், படத்திற்கு நல்ல அபிப்ராயமும், இப்போது நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இலவசக் காட்சிக்குப் பின்னர் ஒன்பது ரூபாய் நோட்டுக்கு நல்ல கூட்டம் வரத் தொடங்கியுள்ளதாம். அழகியைப் போல இந்தப் படமும் ஹிட் ஆகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

4. எவனோ ஒருவன் - இயக்கம் நிஷிகாந்த் காமத். சீமான், மாதவன் நடிப்பில், சர்வதேச தரத்துடன் உருவாகியுள்ள எவனோ ஒருவன் படத்திற்கு கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது.

5. ஓரம்போ - இயக்கம் புஷ்கர் - காயத்ரி. நீண்ட காலத் தயாரிப்பில் இருந்த ஓரம்போ, சென்னை ஆட்டோ டிரைவர்கள் குறித்த படம். படத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. லேட் பிக்கப் ஆகும் வாய்ப்பு உள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil