»   »  கோலிவுட் டாப் 5 படங்கள்

கோலிவுட் டாப் 5 படங்கள்

Subscribe to Oneindia Tamil
Click here for more images
தீபாவளி வாரமான கடந்த வாரத்தில் சூர்யாவின் வேல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் புத்தம் புதுப் படங்கள் திரைக்கு வந்துள்ளன. இதில் சூர்யா நடித்துள்ள வேல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து சென்டர்களிலும் வேல்தான் முதலிடத்தில் உள்ளது.

முதல் வார கலெக்ஷனில் வேல் புதிய சாதனை படைத்துள்ளதாம். அட்வான்ஸ் புக்கிங்கிலும் வேல் சாதனை படைத்து வருகிறதாம். தீபாவளிக்கு வெளியான படங்களிலும் வேல்தான் சூப்பர் ஹிட் என்று பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்தில் முதல் ஐந்து இடங்களில் உள்ள திரைப்படங்கள் குறித்த ஒரு அலசல் ...

1. வேல் - இயக்குநர் ஹரி. தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் திருப்தியுடன் உள்ளனர். குடும்பப் பின்னணியுடன் கூடிய அதிரடிப் படமான இதில் சூர்யாவின் நடிப்பும், ஆசினின் அழகும், வடிவேலுவுன் வெடிக் காமெடியும் படத்ைத தூக்கி நிறுத்தியுள்ளன. ஏ சென்டரிலும் சிறப்பாக ஓடும் வேல், பி மற்றும் சி சென்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டுக் காளை போல துள்ளி ஓடும் வேல், சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.

2. அழகிய தமிழ் மகன் - இயக்குநர் பரதன். விஜய்யை வித்தியாசமான கோணத்தில் காட்ட முயன்றுள்ளார் இயக்குநர் பரதன். இருப்பினும் ரசிகர்களுக்கு படம் திருப்தியைத் தரவில்லை. விஜய்யின் அலட்டல் இல்லாத அழகு நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இனிய இசை, ஷ்ரியா, நமீதாவின் அழகிய நடிப்பு என பல பிளஸ் பாயிண்டுகள் இருந்தும் கூட கதை, ரசிகர்களைக் கவரவில்லை. முதல் வார இறுதியில் அழகிய தமிழ் மகன் 2வது இத்தில் உள்ளது.

3. பொல்லாதவன் - இயக்குநர் வெற்றி மாறன். புதுமுக இயக்குநரான வெற்றி மாறன், பொல்லாதவனில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார். தனுஷின் இயல்பான நடிப்பும், வசனங்களும், காட்சியமைப்பும் படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளன.

4. கண்ணாமூச்சி ஏனடா - இயக்குநர் பிரியா.வி. ரேடான் மீடியா ஒர்க்ஸின் இப்படம் ஜாலியான காமெடியுடன் கூடிய குடும்பக் கதை. ஆனால் ஓவர் ஆக்டிங்கால் படத்தின் போக்கு குழப்பமாகியுள்ளது. கதை மெதுவாக நகர்வதும், காட்சியமைப்பில் பல குழப்பங்கள் காணப்படுவதாலும் படம் ரசிகர்களைக் கவரத் தவறியுள்ளது. ஏதோ ஒரு நாடகத்தைப் பார்க்கிறோமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

5. மச்சக்காரன் - இயக்குநர் தமிழ்வாணன். முதல் படமான கள்வனின் காதலியை விட இப்படத்தை சற்றே சிறப்பாக எடுத்துள்ளார் தமிழ்வாணன். இருப்பினும் திருட்டுப்பயலே, நான் அவனில்லை பட வரிசையில் இந்தப் படத்தை ஜீவனால் நிச்சயம் சேர்க்க முடியாது. தீபாவளிப் படங்களிலேயே படு போரான படம் என்ற பெயரையும் மச்சக்காரன் பெற்றுள்ளது.

Read more about: asin, surya, vel

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil