»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சூர்யா நடித்து கெளதம் இயக்கிய காக்க.. காக்க படம் 100வது நாளை கடந்துள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாகஓடிக் கொண்டுள்ளது.

விக்ரமின் படங்கள் மட்டுமே சமீப காலத்தில் நூறாவது நாளைத் தாண்டி ஓடியுள்ளன. இந் நிலையில் காக்க காக்கபெரும் வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் 100வது நாள் வெற்றியை தயாரிப்பாளர் தாணு தனக்கே உரிய பிரம்மாண்ட ஸ்டைலில் கொண்டாடிவருகிறார். தமிழகம் முழுவதும் காக்க.. காக்கவின் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் படத்தில் நடித்த மற்றும் படம் எடுக்க உதவிய தொழில்நுட்பக் குழுவினர் அனைவரின் படங்களையும்போட்டு நன்றி சொல்லியிருக்கிறார் தாணு.

கலைப்புலி தாணுவின் திரையுலக வாழ்வில், அவருக்கு மிக அதிகமான லாபம் ஈட்டித் தந்துள்ள படம் காக்க...காக்கதானாம். அத்தோடு சூர்யாவுக்கு மிகப் பெரிய இமேஜையும் தந்துவிட்டது. போட்ட காசைப் போல தாணுபல மடங்கு லாபம் பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள்.

தெலுங்கில்...

இந்த வெற்றிப் படத்தை இயக்கிய கெளதமை தெலுங்குக்கு அழைத்துச் சென்றுள்ளார் தாணு.

ரூ. 1 கோடி தருகிறேன். ரூ. 2 கோடி தருகிறேன் என்று தெலுங்குத் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு கெளதமைஅழைத்துக் கொண்டிருக்க, தெலுங்கில் தாணு படம் எடுத்தால் மட்டுமே நான் இயக்குவேன் என்று கூறிவிட்டார் கெளதம்.

இதையடுத்து காக்க.. காக்கவை தெலுங்கில் எடுக்கிறார் தாணு. சூர்யா செய்த ரோலைச் செய்வது வெங்கடேஷ். இசை அதே ஹாரிஸ்ஜெயராஜ் தான்.

Please Wait while comments are loading...