»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கதைக்காக தான் ஹீரோ என்ற டிரென்ட் இப்போது தமிழ் சினிமாவில் தொடங்கி விட்டது. இதில் முதலிடத்தில்இருப்பவர் சூர்யா என்று இயக்குநர் பாலா சூர்யாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிதாமகன் வெற்றிக்குப் பின்னர் முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார் பாலா. சூர்யா உள்ளிட்டபிதாமகன் குழுவினர் அவருடன் இருந்தனர். அப்போது செய்தியாளர்களின் சரமாரி கேள்விக்கு பாலாபதிலளிக்கையில், இந்தப் படத்தில் உண்மையான பிதாமகன் இளையராஜாதான். அவரால் மட்டுமே இந்தக்கதைக்கு இசை அமைக்க முடியும்.

இந்தப் படத்தில் விக்ரமுக்கு பேசுவதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.அவரது கேரக்டருக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை.

பேசிப் பேசித்தான் தனது கேரக்டரை புரிய வைக்கவேண்டிய அவசியம் எழவில்லை. எனவேதான் விக்ரமுக்கு வசனம் கொடுக்கவில்லை.

சுடுகாட்டுக் காட்சிகளில் நிஜ மண்டை ஓடுக்களை வைத்தே படம் எடுத்தோம். அவற்றை எரிக்கும்போது வந்தவாடை இன்னும் கூட குமட்டலைக் கொடுக்கிறது.

கதைக்குத்தான் ஹீரோ என்ற நிலை வந்து விட்டது. ஹீரோவுக்காக கதையை மாற்றுகிற வேலை இனி இங்குநடக்காது. அந்த வகையில் சூர்யா என்னைப் பிரமிக்க வைக்கிறார். காமடியா, ஆக்ஷனா, காதலா என்று எந்தவகையிலும் தன்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்து விட்டார். அந்த வகையில் ரியல் ஹீரோ சூர்யாதான். இனிநிறைய சூர்யாக்கள் வருவார்கள்.

எனது கல்யாணம் குறித்து நான் யோசிக்கவில்லை? அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? இந்தியாவின்இரண்டு முக்கிய விஐபிக்களான வாஜ்பாயும், அப்துல் கலாமும் இன்னும் பிரம்மச்சாரிகளாக இருக்கிறார்கள்.அவர்களை விட எனது கல்யாண விஷயம் பெரியதாக நான் நினைக்கவில்லை.

அதேபோல, நான் சித்தரைச் சந்தித்ததாகவும், ஐந்து படங்களைக் கொடுத்து விட்டு நான் சாமியாராகி விடுவேன்என்றும் சில பத்திரிக்கைகளில் எழுதியுள்ளனர். அப்படி எழுதியவர்களை சந்திக்க நான் மிகவும் ஆவலாகஉள்ளேன். காரணம், இதுவரை அப்படி ஒரு சித்தரை நான் சந்தித்ததே இல்லை என்றார் பாலா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil