»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பிதாமகனில் விக்ரமின் நடிப்புக்கு இணையாக நடித்துக் காட்டிய சூர்யா தான் இப்போது தமிழ் சினிமாஇன்டஸ்ட்ரி டாக்காக இருக்கிறார்.

தமிழ் ஹீரோக்களில் சூப்பர் ஸ்டார் இமேஜை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் விக்ரம் முதலிடத்தில் இருக்கிறார்.கையில் 13 படங்களுடன் உள்ள தனுஷ் திடீரென பட்டையைக் கிளப்பினாலும், என்ன ரோல் கொடுத்தாலும்அட்டகாசம் செய்யும் சூர்யா மீது இளம் இயக்குனர்கள் இடையே ஒரு கிக் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

மேலும் ரசிகைகளின் வரவேற்பு சூர்யாவுக்கு மிக அதிகமாக உள்ளதாம். சமீபத்தில் சூர்யா நடித்து வெளியானஉன்னை நினைத்து, மெளனம் பேசியதே, காக்க.. காக்க.., பிதாமகன் என அனைத்துப் படங்களுமே ஹிட்.

அதிலும் கடைசி இரு படங்களும் வசூலில் தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றைப் படைத்துக் கொணடிருக்கின்றன.

இருந்தாலும் தனது ஊதியத்தை ஒரு கட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மிக செலக்டிவான படங்களில் மட்டுமேநடித்து மிக நிதானமாக அவர் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார்.

அடுத்து மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யாவுக்கு படு வித்தியாசமாக ரோலாம். இதில் அவருக்குஜோடி ஹேமமாலினியின் மகளான இஷா தியோல். (இதில் மாதவன் - மீரா ஜாஸ்மின், பாய்சில் அம்மணமாய்ஓடிய பையன் சித்தார்த்- திரிஷாவும் ஜோடியும் உண்டு)

மணிரத்னத்தின் படம் முடிந்தவுடன், காக்க.. காக்கவை இயக்கிய கெளதமுடன் சேர்ந்து சென்னையில் ஒருமழைக்காலம் என்ற படம் செய்ய இருக்கிறார். அடுத்து தனுசின் அண்ணன் செல்வராகவனுடன ஒரு படம் எனமகா பிஸியில் இருக்கிறார்.

இது தவிர தினமும் யாராவது ஒரு தயாரிப்பாளராவது சூர்யாவின் வீட்டுக்கு பெட்டியுடன் வந்து நிற்பதும்தொடர்கிறது. கோடி தர்றேன், ரெண்டு கோடி தர்றேன் என்றாலும் அதில் மயங்க மறுப்பது தான் சூர்யாவின் பலம்என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

ஒரு படத்தில் என்ஜேக் ஆகிவிட்டு அடுத்த படத்துக்கும் காசு வாங்கிக் கொண்டு இரு தரப்பையும் அல்லாட விடும்வேலையையும் அவர் செய்வதில்லை என்பதால் மிக மரியாதையாகவே அவரை கோலிவுட்டில் பார்க்கிறார்கள்.

சமீபத்தில் பேட்டியளித்த பிதாமகன் இயக்குனர் பாலா, சூர்யா பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். ஆக்ஷன், காதல், காமெடின்னு எதைக் கொடுத்தாலும் அப்படி அட்டகாசமா செய்றார் சூர்யா.பிதாமகன்ல என்னை பிரம்மிக்க வச்சுட்டார்.

ஹீரோவுக்காக கதை என்ற பார்முலாவை உடைத்தெறிந்து காட்டிவிட்டார். நீங்க என்ன கதை வேணும்னாலும்வச்சுகுங்க. வசனத்தை குடுங்க, கேமராவை ஆன் பண்ணுங்கனு சொல்லிட்டு, தனது குரல் மாடுலேஷன், முகத்திலமாற்றம், நடை, உடை, பேச்சுல மாற்றம் பண்ணிக் காட்றார்.

ஒரு டைரக்டரா என்னை அசர வச்சார் சூர்யா. பிதாமகன் படத்தை இயக்கிய கடந்த 6 மாதத்தில் ஒரு படமும்பார்க்கலை. இப்ப மொதல்ல காக்க.. காக்க தான் பார்க்கப் போறேன் என்றார் பாலா உணர்ச்சி பொங்க.

பிதாமகனில் சூர்யா பிணமான காட்சியை 4 நாள் படமாக்கியிருக்கிறார் பாலா. அந்த 4 நாளும் உதடு, முகம்,வாயில் போட்ட ரத்தக்கறை மேக்-அப் கலையக் கூடாது என்பதற்காக சாப்பிடாமல் இருந்து, டியூப் வழியாகஜூஸை மட்டும் ஊற்றினார்களாம். மனிதர் அசராமல் இருந்து நடித்தாராம். சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள்பிதாமகன் யூனிட்டார்.

கொசுறு: இந்தப் படத்தின் ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியவர் ஸ்டன்ட் மாஸ்டர் சிவா. விக்ரமுக்கு வித்தியாசமானபைட்களை வைத்த இவர், மனிதர்கள் அடித்துக் கொள்ளும்போது உருவாகும் சத்ததுக்கு இசையைப் போடாமல்மாட்டுத் தொடைக் கறியில் கட்டையால் அடிதது ஒலி எழுப்பினாராம். இதற்கு இசைஞானியின் பூரண ஆசியும்இருந்ததாம்.

Please Wait while comments are loading...