»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சூர்யா பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் நடித்த படங்களிலேயே முதல் முறையாக காக்க .. காக்க.. முதல்நாளிலேயே தமிழகம் முழுவதிலும் ஹவுஸ் புல்லாக ஓடி தொடர்ந்து, ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டுள்ளதாம்.

காவல்துறை அதிகாரி வேடத்தில் சூர்யா நடித்துள்ள காக்க .. காக்க.. தயாரிப்பில் இருந்தபோதே பலத்தஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கலைப்புலி தாணுவின் தயாரிப்பு என்பதால் படமும் பிரம்மாண்டமானசெலவில் உருவாக்கப்பட்டது.

ஜோதிகா- சூர்யா காதல் கிசுகிசு அதிகமானதும் இந்தப் படம் ஆரம்பித்த பிறகு தான்.

இந் நிலையில் காக்க.. காக்க.. கடந்த இரு நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகி, முதல் நாள் காட்சிகள் அனைத்தும்தமிழகம் முழுவதிலும் ஹவுஸ் புல் ஆக ஓடியுள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே இதுதான் முதல் நாள் ஹவுஸ்புல் ஆன படமாம்.

தொடர்ந்தும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. படம் சூப்பராக இருப்பதாக பார்த்து விட்டு வருபவர்கள்சொல்வது சூர்யாவையும் ஜோதிகாவையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காக்க ..காக்க.. படத்தின் பிரிவியூவுக்கு வந்திருந்த சென்னை நகரில் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்,போலீஸ்காரன்னா இப்படித்தான் இருக்கனும் என்பதை நானும் கூட இந்தப் படத்தின் மூலம் தெரிந்துகொண்டேன், வெல்டன் சூர்யா என்று பாராட்டி விட்டுப் போனாராம்.

சொல்லி சொல்லி சிலாகித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.

காக்க .. காக்க.. சூர்யாவைக் காத்துவிட்டதாகவே தெரிகிறது.

சூர்யா பற்றி இன்னொரு கொசுரு செய்தி, நந்தாவுக்குப் பிறகு பல தயாரிப்பாளர்கள் ரூ. 1 கோடி தர்றேன்,ஒன்றரை கோடி தர்றேன் என்று கூறிக் கொண்டு கால்ஷீட் கேட்டுவர அனைவருக்கும் கும்பிடு போட்டு திருப்பிஅனுப்பினார் சூர்யா. தனது சம்பளத்தை உயர்த்த தொடர்ந்து மறுத்து விட்டார்.

காக்க.. காக்க... வுக்கு அடுத்து வரவுள்ள பிதாமகனுக்குப் பின்னர் தான் சம்பளத்தை இவர் உயர்த்துவார்என்கிறார்கள். பண விஷயத்திலும் பழக்கத்திலும் அப்பாவைப் போலவே படு டீசண்ட் மேன் என்று புகழ்கிறார்கள்கோலிவுட்டில்.

Please Wait while comments are loading...