»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாட்டவே மாட்டேன், முடியவே முடியாது.. நாங்கெல்லாம் யாருக்கும் பணிய மாட்டோம் என்று வடிவேலு மாதிரி மார்தட்டிய எஸ்.ஜே. சூர்யா அந்தரத்தில் அப்படியே ஒரு அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.

பி.எப் என்ற தனது படத்தின் பெயரை மாற்ற முன் வந்திருக்கிறார். படத்துக்கு நல்ல தமிழ் பெயர் சூட்டுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு தரப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

படத்துக்கு பி.எப் என்று சுருக்கி பெயர் வைத்து தமிழகத்தில் வாய்களை விரிவாக விரிய வைத்தவர் சூர்யா. அய்யோ, இப்படி ஒரு பெயரா என்று அலறியவர்களுக்கு, இதுக்கு அர்த்தம் பெஸ்ட் பிரண்ட் தான். நீங்க நினைக்கிற மீனிங் இல்ல என்று வியாக்கியானம் சொன்னார்.

இதையடுத்து ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். சூட்டிங் ஸ்பாட்டுக்கே போய் சூர்யாவை செல்லமாய் மிரட்டி வந்தனர் விடுதலைச் சிறுத்தைகள்.

இதைத் தொடர்ந்து படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் வைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவே, சூர்யா ரொம்ப குஷியானார்.

ஹீரோயின் நிலாவும் சூர்யாவும் சேர்ந்து கவர்ச்சி டொர்னடோவை தமிழகத்தில் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்ததால், படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இமயமான ஒரு இயக்குனர், சூர்யாவிடம் பேசியதாக சொல்கிறார்கள். தமிழின் அருமை பெருமைகள் குறித்து தனக்கேயுரிய பாணியில் யார் உணர்ச்சிக் கொந்தளிப்பாய் அவர் முழங்கியிருக்கிறார்.

தமிழிக்கு தமிழன் கேடு செய்யக் கூடாது என்று அவர் சொல்லி முடித்தபோது, மாத்திர்றேன் சார்.. மாத்திர்றேன் என்று பதில் தந்திருக்கிறார் சூர்யா.

சொன்ன மாதிரியே படத்தின் பெயரை தமிழில் மாற்றிவிடும் முடிவுக்கு வந்திருக்கிறார். இந்தப் பொறுப்பை ரசிகர்களிடமே விட்டிருக்கிறார். படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசையும் அறிவித்திருக்கிறார் சூர்யா.

இது குறித்து சூர்யா கூறுகையில், எல்லோரையும் குஷிப்படுத்த படம் எடுப்பவன் நான். அப்படித்தான் இதுவரை இருந்தேன். இனியும் அப்படியே இருப்பேன்.

நான் இயக்கி, தயாரித்து, நடிக்கும் படத்துக்கு பெஸ்ட் பிரண்ட் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தது தெரிந்தோ, தெரியாமலோ சிலரது உணர்வுகளைக் காயப்படுத்திவிட்டது. எல்லோரையும் மகிழ்விக்க முயல்பவன் நான். என்னால் யாரும் காயப்படக் கூடாது.

இதனால் தலைப்பை மாற்ற முடிவு செய்துவிட்டேன். பொறுப்பை தமிழக மக்களிடமே ஒப்படைத்துவிட்டேன் என்றார்.

எங்கே.. சூர்யாவுக்கு எல்லோரும் ஜோரா ஒரு ஓ.. போடுங்க.

அப்படியே ஒரு நல்ல தலைப்பச் சொல்லுங்க பார்ப்போம்.

Read more about: best friends surya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil