»   »  'கற்பு'-சுஷ்மிதா மீது மதுரையில் வழக்கு

'கற்பு'-சுஷ்மிதா மீது மதுரையில் வழக்கு

Subscribe to Oneindia Tamil
Sushmita Sen
இந்தியர்கள் கற்பில்லாதவர்கள் என்று பேசிய பேச்சுக்காக நடிகை சுஷ்மிதா சென் மீது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கிரீஷ்குமார் என்பவர் இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், பிரபல இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் அக்டோபர் மாதம் 7ம் தேதி தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது, இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பிறகும் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது தவறில்லை. இதெல்லாம் இன்றைய கால கட்டத்தில் சாதாரணமான ஒன்று. இந்தியர்கள் எவருக்கும் கற்பு இல்லை என்றார்.

அவரது பேச்சு என்னைப் இந்தியர்களின் மனதை புண்படுத்தி விட்டது. அவரது பேச்சை கேட்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் தவறான பாதைக்கு செல்ல வழிவகுத்து விடும்.

எனவே அவதூறாக பேட்டி கொடுத்த சுஷ்மிதாசென் மீது பாலியல் பற்றி மலிவாக விமர்சித்தல், அவதூறாக பேசுவது, பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி, சுஷ்மிதா சென் வருகிற ஜனவரி 7ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஏற்கனவே தமிழ் பெண்களின் கற்பு குறித்து பேசிய நடிகை குஷ்பு பெரும் சர்ச்சைக்கு ஆளானார். அவர் மீது சரமாரியாக வழக்குகள் தொடரப்பட்டன. இப்போது கற்பு குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுஷ்மிதா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil