»   »  சுஷ்மிதா சென் அலுவலகத்தில் திருட்டு

சுஷ்மிதா சென் அலுவலகத்தில் திருட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
முன்னாள் மிஸ் யுனிவர்சும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் அலுவகத்தில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர்.

மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் தந்தரா எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சுஷ்மிதா.

இந் நிலையில் அலுவலகத்திற்கு வந்த சுஷ்மிதா சென் தனது அறையில் வைத்திருந்த செல்போன்கள், பணம் மற்றும் நகைகள் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். காணாமல் போன பொருட்களின் மதிப்பு ரூ. 50,000 இருக்கும் என்று தெரிகிறது.

இந்த திருட்டு குறித்து சுஷ்மிதா சென் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த திருட்டு நடந்தது முதல் அந்த அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த கஜானந்த் பர்தேசி என்பவரை காணவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Read more about: sushmithasen

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil