twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாபுவும், கோபுவுமாக வாழ்ந்தவங்களுக்குள்ள இப்போ பங்காளிச் சண்டை! - #KamalhaasanVsSVeShekar

    By Vignesh Selvaraj
    |

    சென்னை: இந்து தீவிரவாதிகள் என விமர்சித்ததால் நடிகர் கமல்ஹாசன் மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை வரவேற்று நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்தப் பிரச்னையில் மோதிக்கொள்ளும் எஸ்.வி.சேகரும், கமல்ஹாசனும் கிட்டட்தட்ட 40 ஆண்டுகால நண்பர்கள். எஸ்.வி.சேகர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதே கமல் படத்தில் தான்.

    அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக மோதிக்கொள்ளும் இவர்கள் ஆரம்ப காலத்தில் எப்படிப்பட்ட நண்பர்கள் என்பதை இவர்கள் இணைந்து நடித்த படங்களின் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.

    இந்து தீவிரவாதி

    இந்து தீவிரவாதி

    இந்து தீவிரவாதி என வார இதழ் கட்டுரை ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பா.ஜ.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நடிகர் கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நீதிமன்றத்தில் கமல் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    எஸ்.வி.சேகர் வரவேற்பு

    எஸ்.வி.சேகர் வரவேற்பு

    கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: 'காசிக்கு போய் கங்கையில் மூழ்கி வர இது ஒரு நல்ல சந்தர்ப்பம். வாரணாசி ஹோட்டல் ரூம்ல பைப்புல வர தண்ணி கூட கங்கை நீர்தான்' என குறிப்பிட்டுள்ளார்.

    கமலும் சேகரும்

    கமலும் சேகரும்

    'கமல்ஹாசன் நேர்மையானவர்... அவர் அரசியலுக்கு வரவேண்டும்... கமலுக்கும் எனக்கும் ஒத்த கருத்துகள் நிறைய உண்டு. எனவே அவர் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்' என ஒருசில மாதங்களுக்கு முன்பு கமலைச் சந்தித்த பிறகு எஸ்.வி.சேகர் கூறினார்.

    நானும் கமலை ஆதரிப்பேன்

    நானும் கமலை ஆதரிப்பேன்

    'மூப்பனார் கட்சி தொடங்கியபோது படித்தவர்கள் அவருக்கு ஆதரவு அளித்ததைப் போன்று, கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் படித்த இளைஞர்கள் பலர் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள்' எனவும் கூறியிருந்தார் எஸ்.வி.சேகர். ஆனால், கமல் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே, இப்போது கமலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

    எஸ்.வி.சேகரின் அறிமுகம்

    எஸ்.வி.சேகரின் அறிமுகம்

    நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த எஸ்.வி.சேகர் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானதே கமல் நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் மூலமாகத்தான். கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் சிறு வேடத்தில் வந்து போவார் எஸ்.வி.சேகர்.

    கமலின் நெருங்கிய நண்பர்

    கமலின் நெருங்கிய நண்பர்

    தனது ஆரம்ப காலங்களில் பல படங்களில் கமலுடன் நடித்தார் எஸ்.வி.சேகர். 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் கமலுடன் அவ்வப்போது இணைந்து வேலை தேடும் நண்பராக நடித்திருக்கிறார் எஸ்.வி.சேகர். 'சிம்லா ஸ்பெஷல்' படத்திற்குப் பிறகு எஸ்.வி.சேகர் சிறு பட்ஜெட் குடும்பப் படங்களில் நடிக்கத் தொடங்கி வேறு பாதையில் பயணித்ததால் இருவரும் இணையும் வாய்ப்பு கிட்டவில்லை.

    பாபு - கோபு

    பாபு - கோபு

    முக்தா சீனிவாசன் இயக்கிய 'சிம்லா ஸ்பெஷல்' படத்தில் கமல் கோபுவாகவும், எஸ்.வி.சேகர் பாபுவும் நடித்திருக்கிறார்கள். இணைபிரியாத நண்பர்களுக்கு அந்தக்காலத்துக் கதைகளில் பாபு - கோபு, ராமு - சோமு எனப் பெயர் சூட்டப்படுவது வழக்கம். அப்படி இணைபிரியா நண்பர்களாக நடித்த கமல்ஹாசனையும், எஸ்.வி.சேகரையும் இருவரின் அரசியலும், கொள்கையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

    English summary
    Actor SVe Shekher slammed that Actor KamalHaasan on Hindu terror. Kamalhaasan and SVe Shekar were friends together for 40 years. They worked together for some films in SVe Shekar's initial stage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X