»   »  எஸ்.வி.சேகர் மகள் திருமணம்

எஸ்.வி.சேகர் மகள் திருமணம்

Subscribe to Oneindia Tamil

நடிகர் எஸ்.வி.சேகரின் மகள் அனுராதாவுக்கு இன்று சென்னையில் கல்யாணம் நடந்தது.

அதிமுகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு அனுராதா என்கிற மகளும், அஷ்வின் என்கிற மகனும் உள்ளனர். இவர்களில் அஷ்வின் நடிகராகி விட்டார். தனது தந்தையின் தயாரிப்பில் வேகம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், மகள் அனுராதாவின் கல்யாணத்தை முடிவு செய்தார் சேகர். அனுராதாவுக்கும், பரத் செளந்தரராஜனுக்கும் கல்யாணம் முடிவானது. இவர்களது கல்யாணம் இன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் கோலாகலமாக நடந்தது.

கல்யாணத்துக்கு பாஜக தலைவர் இல.கணேசன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், நடிகர்கள் சிவக்குமார், கார்த்திக், பாடலாசிரியர் முத்துலிங்கம், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர்.

அதிமுகவிலிருந்து பெருந்தலைகள் யாரும் கல்யாணத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.

இன்று மாலை 7 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் எஸ்.வி.சேகர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil